பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் அதுபவம் ஏறுதல் ஆகையால் இப்போதுள்ள நிலையே இயற்கை என்று நினைக்கக் கூடாது. நாம் இப்போது காணுகின்ற திருஉருவங்கள் இப்படித்தான் இருக்கும் என்றும் எண்ணக் கூடாது. அநுபவம் ஏற ஏற இப்போது காணுகின்ற உருவங்கள் எல்லாம் எந்த வகை யில் பயன் தருகின்றன என்பது அப்போது விளங்கும். இப்போது சொன்னாலும் விளங்காது. அறிவுக்கு அகப்படுகிறதாய் இருந்தால் காரண காரியங்களைக் கொண்டும் ஊகத்தைக் கொண்டும் நிரூ பித்துவிடலாம். இதுவோ அறிவுக்கும் எட்டாத தாக இருக்கிறது. அதனால் அறிவுக்குத் தெளியும்படியாக எந்த வகையான பிரமாணத்தைக் காட்டியும் நிரூபிக்க முடியாது. 'அவ்வாறறிவார் அறிகின்றதலால் - எவ்வாறொருவர்க் கிசைவிப் பதுவே" என்று அருணகிரியார் அநுபூதியில் சொல்கிறார். முன்னாலே நாம் செய்த செயல்களை அப்போது நன்மை என்றே செய்திருக்கிறோம். இப்போது நாம் செய்கின்ற செயல்கள் இப்போது நன்மையாகத் தோன்றுகின்றன. முன் நாம் செய்த செயல் இழுக்கு என்று இப்போது தெளிவாகிறது. இழுக்கான செயல்களை நாம் செய்ய லாகாது என்று நமக்கு அப்போதே தெளிவு பிறந்திருக்குமானால் அவற்றைச் செய்திருக்கமாட்டோம். படிப்படியாக இந்தத் தெளிவு உண்டாகிறது. படிப் படியாக நம் உள்ளத்தில் வாசனைப் படலம் ஏறிக்கொண்டு வந்திருக்கிறது. வினைகளும் மெல்ல மெல்ல நம் மிடத்தில் குவிந்திருக்கின்றன. அவற்றைப் போக்க வேண்டுமானால் மெல்ல மெல்வத்தான் போக்க வேண்டும். செயல்கள் மெல்ல மெல்ல அடங்கி வரும்போது அதன் பயனாக இன்பம் மெல்ல மெல்ல ஊறிப் பின்பு பரமானந்த சாகரமாக மாறும். அருணகிரிநாதப் பெருமான், செயல்கள் எல்லாம் அடங்கி நிற்க ஜீவபோதம் அற்று இறைவனோடு ஒன்றுபடுகின்ற ஆனந்த நிலையை இந்தப் பாட்டில் சொல்கிறார். நமக்கும் இதற்கும் என்ன தொடர்பும் என்றும், எட்டாத இடத்தில் இருக்கிற ஒன்றை நாம் பார்த்துக் கொட்டாவி விடுகிறோம் என்றும் நினைக்கக் கூடாது. நாம் அநுபவிப்பதற்கு ஒத்து வருகின்ற பழக்கத்தையும் இந்தப் பாட்டில் சொல்கிறார். -