பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 நம்பாதவர்கள் முடியாத பிறவிக் கடலுக்குள் ஆழ்கிறார்கள்; முழுதும் கெடுக்கும் மிடியால் விசனப்படுகிறார்கள். வறுமையின் கொடுமை மிடியின் இயல்பு கொடியது. எல்லா இன்ப நலங்களையும், வள வாழ்வையும் குலைக்கின்ற பாவி அல்லவா அது? 'வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா! அடிஅந் தம்இலா அயில்வேல் அரசே! மிடிஎன் றுஒருபா விவெளிப் படினே' என்று அருணகிரியார் அநுபூதியில் சொல்கிறார். "இன்மை என ஒரு பாவி’ என்று கூறிய வள்ளுவரைப் போலவே அவருக்கும் கோபம் கொப்புளிக்கிறது; மிடி என்று ஒரு பாவி என்று சொல்கிறார். உய்யும் வழி அந்தப் பாவியின் கையில் அகப்பட்டு விசனம் அடையாமல் இருக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இறைவனை நம்பவேண்டும். அவனை நம்பி வழிபடுபவர்கள் யாரும் மிடியால் விசனப்படமாட்டார்கள். இறைவனை நம்பினால் நற்குணங்கள் தாமே வந்து சேரும். யாரைக் கண்டாலும் கோபித்து அருவருக் கின்ற நிலை மாறி அன்போடு நெருங்கிப் பழகும் சுமுகமான குணம் உண்டாகும். உலகத்திலுள்ள மக்கள் எல்லாரிடத்திலும் அன்பு பாலிக்க வேண்டுமானால், ஆருயிர்களுக்கு மூலகாரண மாக இருக்கும் ஆண்டவனிடத்தில் அன்பு பாலிக்க வேண்டும். அவனிடத்தில் அன்பு பாலித்தால் எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும் நற்பண்புகள் உண்டாகிவிடும். ஆண்டவனிடத் தில் தாயிடம் வைப்பது போல அன்பு செய்து நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் ஆண்டவனுக்கு நாம் குழந்தை என்ற பாவம் வரவேண்டும். குழந்தைப் பண்புகள் வளரக் குழந்தைக் கடவுளைத்தானே வணங்க வேண்டும்? குழந்தைக் கடவுளை வணங்குபவருக்கு உண்டாகும் பயன்கள் இந்த இரண்டும். முடியாப் பிறவிக் கடலில் புகார்; முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார். 22