பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் திருவிடைக்கழிப் பிள்ளைத்தமிழ் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஆசிரியருக்கு ஆசிரியராகிய மகாவித்துவான்பூரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் திருவிடைக் கழிப் பிள்ளைத் தமிழில் பாடி இருக்கும் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. திருவிடைக் கழி என்பது சோழ நாட்டில் முருகன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களில் ஒன்று. திருவிடைக்கழி முருகன்மேல் மகாவித்துவான் அவர்கள் ஒரு பிள்ளைத் தமிழ் பாடினார். அதில் சிற்றில் பருவத்தில் ஒரு பாட்டு வருகிறது. சின்னஞ்சிறு குழந்தையாகிய எம்பெருமான், பெண் பிள்ளைகள் கட்டிய வீடுகளைக் காலால் சிதைக்கிறான். அதைக் கண்டு அந்தக் குழந்தைகள் எம்பெருமானிடம், "எங்கள் சிற்றிலைச் சிதைக்கவேண்டாம்' என்று சொல்கிறார்கள். "சிறியேம் சிற்றில் சிதையேலே' என்று முடியும் பாடல்கள் அந்தப் பருவத்தில் உள்ளன. அந்தக் குழந்தைகள் சொல்வதாக ஓர் அழகான கற் பனையைப் பிள்ளையவர்கள் அமைத்திருக்கிறார்கள். முருகனைப் பார்த்து அந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள். 'எம்பெருமானே, உன்னுடைய தாயாகிய பார்வதி தேவி எங்களைப் போன்ற பெண். ஆகையால் முன் காலத்தில் எங்களுக்கு ஒரு நன்மையைப் செய்திருக்கிறாள். சரவணப்பூம் பொய்கையில் முதல் முதலாக உன்னைக் காணும் பொருட்டுச சிவபெருமான் பார்வதியுடன் வந்தான். அம்மை உன்னைக் கண்டவுடன் அன்பு மிகுந்து ஆறு குழந்தைகளாக இருந்த உன்னை அப்படியே எடுத்து அணைத்தாள். தாமரைப் பூக்களில் தனித்தனிக் குழந்தையாக ஆறு உருவம் எடுத்து நீ விளையாடிக் கொண்டிருந்தாய். அந்தப் பெருமாட்டி சேர்த்து ஓர் உருவாக்கிய தால் கந்தன் என்ற திருநாமத்தை நீ பெற்றாய். அப்போது ஆறு குழந்தைகளும் ஒன்றாகிய திருவுருவத்தில் நீ காட்சி அளித்தாய். அந்தக் கோலத்தில் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் அமைந் தன. எம்பெருமாட்டி முகம் ஆறினுக்கு ஏற்பக் கை ஆறிரண்டு செய்தது போலக் கால் ஆறிரண்டையும் அப்படியே வைக்க வில்லை. இரண்டு கால்களே இருக்கும்படி அருள் பாலித்தாள். இப்படிப் பார்வதி தேவி செய்ததற்குக் காரணம், நாங்கள் சிற்றில் இழைத்தால் பன்னிரண்டு கால்களும் துன்புறுத்தும் என்பதை எண்ணித்தான் இருக்கவேண்டும். உண்மையில் இப்போது 33.9