பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 'கோள்இல் பொறியிற் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்றார். அந்தத் திருவடியைச் சேர்ந்தவர்கள் பிறவிப் பெருங் கடலிலே நீந்துவர் என்றும் சொன்னார். அன்பர்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பவை ஆண்டவ னுடைய திருவடிகள். எம்பெருமான் திருவருள் நெறியில் செல் பவரைத் தோளார், கையார் என்று சொல்லாமல் அடியார் என்று சொல்வதற்குக் காரணமே அவர்களுக்கு மற்றப் பகுதியைப் காட்டிலும் திருவடியில் நோக்கம் அதிகம் என்று காட்டுவது தான். இறைவனுடைய பாதாம்புயத்தில் அடியார்களுடைய உள்ளமாகிய வண்டுகள் உலவும். அடியார்களுடைய உள்ளம் இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொண்டால் அவர்களுக்கு வேண்டின எல்லாம் கிடைக்கும். இந்த நுட்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் பலர் திண்டாடுகிறார்கள். இதனைப் பாரதத்தில் வருகின்ற வரலாறு ஒன்று தெரிவிக் கிறது. பாரத நிகழ்ச்சி L ஞ்சபாண்டவர்கள் காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒர் ஆண்டு தலைமறைவாக இருந்துவிட்டு வெளி வந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு உரிய நாட்டை மீட்டும் தங்களுக்குக் கொடுக்கும் படியாகக் கேட்டு வரும்படி தருமபுத்திரர் ஒரு முனிவரைத் துரியோதன னிடம் தூது அனுப்பினார். அப்போது துரியோதனன் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. திருதராஷ்டிரன் அந்த முனிவரைப் பார்த்து, 'என் பிள்ளைகள் பொல்லாதவர்கள். தருமன் நல்லவன் ஆயிற்றே. அவன் எங்கே வாழ்ந்தாலும் அதுதான் அஸ்தினாபுரம். இதனை ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்து பழகினவர்களுக்கு அங்கேயே இருப்பதில் துன்பம் ஒன்றும் இல்லை. எதற்காக மறுபடியும் இந்தப் பொல்லாத பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?' என்று சொல்லி அனுப்பினான். அதனைக் கேட்ட தருமபுத்திரர், 'பெரியப்பா சொல்வது நியாயந்தானே? நாம் உற வினர்களோடு சண்டை போட்டுக் கொண்டு அவர்களை அழித்து விட்டு ஏன் நாட்டில் வாழவேண்டும்? காட்டில் வாழ்ந்தால் நல்லதுதான்' என்று கூறினார். 321