பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வேலைப் பிரயோகம் செய்ய வேண்டுமென்று கேட்பது தகுதி யன்று. மிக்க பழைய சூரன் நடுங்கும்படியாக நீ வைத்திருக்கும் அந்த வேலை வாங்குவதற்கு என் புத்தி தகுதி உடையதா?. என்று கேட்கிறார். முது சூர் நடுங்கு அச் சத்தியை வாங்கத் தரமோ? "என் புத்தியை வசப்படுத்தி உன் பாதத் தாமரையிலே புகட்டி அன்பாய் முத்தியை வாங்கத் தெரியாத என் நிலையை மாற்றி ஒறுத்து ஆட்கொள்வதற்காக, உன் கையிலுள்ள சத்தியாகிய வேலை விடு அப்பா என்று நான் சொல்வேன். நீயும் என்னுடைய விண்ணப்பத்திற்காக வேலை விடுக்கத் தயங்க மாட்டாய். ஆனால் அது நியாயமான காரியம் ஆகுமா? சிறு முள்ளால் களைவதைக் கோடரியைக் கொண்டு களைவது முறையாகாது. அதனால் எனக்கு நன்மை உண்டானாலும் வேலுக்குப் பெருமை குறைந்துவிடும். அது சாமானிய வேலாயுதமா? அதன் பெயரைக் கேட்டாலே சூரபன்மன் நடுங்கினான். அதனுடைய பெருமையைக் கந்தபுராணம் முதலிய நூல்கள் எவ்வளவு சிறப்பாகக் கூறு கின்றன. அத்தகைய பெரிய படையை எனக்கு உதவியாகவிட வேண்டுமென்று கேட்பது முறை அன்று' என்கிறார். அவன் திருவுள்ளம் ஆனால் திருந்த வேண்டுமே, என்ன செய்வது, மலை தவிடு படும்படியாகக் குத்தியவன் முருகன்; சூரனைக் குத்தவும் கிரளெஞ்ச மலையைக் குத்தவும் பயன்படுத்திய வேலை உடையவன். அதற்கு இப்போது வேலை வைக்கக் கூடாது. பின்னே என்ன செய்வது என்ற எண்ணம் அருணகிரிநாதருக்குத் தோன்றியது. ‘எம்பெருமான் என்னை ஆட்கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திருந்த வேண்டும் என்று எனக்கு உள்ள ஆவலைக் காட்டிலும் அவனுக்குள்ள ஆவல் மிகுதி யானது. என்னைத் திருத்து என்று நான் விண்ணபித்துக் கொண் டாலே போதும். இப்படித் திருத்து என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நோயாளி எனக்கு இன்ன மருந்து கொள் என்று கேட்பது நியாயம் ஆகாது. இவனுக்கு இன்ன மருந்து கொடுக்கவேண்டுமென்பது மருத்துவனுக்குத் தெரியும். அதுபோல் 33O