பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 1 வேலாயுதத்தால் சூரனையும், கிரெளஞ்சமாகிய குவட்டை யும் முருகன் குத்திய திருவிளையாடல் அருணகிரி நாதருக்கு மீண்டும் நினைவு வருகிறது. சென்ற பாட்டில் அந்த விளை யாட்டை நினைந்தவர் அடுத்த பாட்டிலும் அதனைப் பாடுகிறார். 'சூரனையும் கிரெளஞ்ச மலையையும் வேலினால் அழித்த முருகப் பெருமானுடைய தொண்டர்களைச் சார்ந்தால் தான் நமக்குக் கதி உண்டு என்ற கருத்தை வைத்துப் பாடுகிறார். தம்முடைய நெஞ்சைப் பார்த்து, 'பாவி நெடு நெஞ்சமே!' என்று விளிக்கிறார். அவர் சொன்னதை நாம் ஒவ்வொருவரும் சொல்லி நம்முடைய நெஞ்சுக்கு அறிவுறுத்த வேண்டும். செல்வமும் வாழ்வும் மனிதன் எல்லாப் பொருளையும் மதிப்பது இல்லை. பெரும் பாலான மக்கள் மதிப்பது பொருட்செல்வம் ஒன்றைத் தான். ஆனால் இறைவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவன் திருவருளுக்காக ஏங்கி நிற்பவர்கள் மதிப்பதோ அருட் செல்வம். நாம் நம்முடைய புறக் கண்ணைக் கொண்டு பார்த்து அந்தக் காட்சியை மதிக்கிறவர்கள். இந்தக் கண் ஒரு குறிப்பிட்ட எல்லைக் குள் அடங்கித்தான் பார்க்கும். காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப் பட்டிருக்கும் நாம் அந்த எல்லைக்குள் அடங்கினவற்றையே பார்க்க முடியும். 'இப்போது சோறு வேண்டும்; நாளைக்குச் சோற்றுக்குப் பணம் வேண்டும் என்று நம்மால் நினைக்க முடிகிறது. நாள்தோறும் சோறு உண்டு நல்ல வீட்டில் வாழ்ந்து ஆடை அணிகளைப் புனைந்து கருவிப் பொருள்களைப் பெற்று வாழ வேண்டுமென்று நினைக்கிறோம். தொடர்ந்து வாழ்க்கை நடைபெறுவதற்குப் பயன்படும் கருவியாவது பொருள் என்று