பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை உண்டாகிறது. செல்வம் அதிகமாக இருந்தால் பல காலத்திற்கு நன்றாக வாழலாம் என்ற எண்ணத்தினால்தான் மனிதன் பணத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். உலகத்தில் நன்றாக வாழ்கிறவர் கள் என்று பணம் படைத்தவர்களைச் சொல்கிறார்கள். பணம் இல்லாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்று சொல்கிறார்கள். கல்வியும் செல்வமும் பணம், கல்வி ஆகிய இரண்டிலும் கல்வியைச் சிறந்ததாகப் பெரியவர்களும் அறிவாளிகளும் சொல்கிறார்கள். ஆனாலும் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பணத்தினிடமே மதிப்பு உண்டாகிறது. கல்வி பெரியது என்று வாயால் சொல்வார்களே யொழியச் சரியான சந்தர்ப்பத்தில் அதற்கு மதிப்புக் கொடுக்கா மல் செல்வத்திற்கே மதிப்புக் கொடுப்பார்கள். 'பணம் பந்தி யிலே குலம் குப்பையிலே' என்று பழமொழி பணத்திற்கு இருக்கும் மதிப்பை விளக்குகிறது. ஒரு பெரிய விருந்து நடக்கிறது. நூல் ஆயிரம் படித்த பெரியவன் ஒருவன் அந்த விருந்துக்குப் போகிறான். ஒன்றுமே படிக்காத அறிவிலி ஒருவன் வருகிறான். புலவன் சிறிய மேல் துண்டும் சாதாரண வேட்டியும் அணிந்து கொண்டு நடந்து வந்து உள்ளே நுழைகிறான். அவன் ஏழை. ஆனால் அறிவிலியாக இருப்பவன் பணம் படைத்தவன்; நல்ல ஆடை அணிகளைப் புனைந்து கொண்டு காரில் போய் இறங்கு கிறான். விருந்துக்கு வருகிறவர்களை வரவேற்பதற்காக அங்கே நிற்பவர்கள் யாருக்கு அதிகமாக வரவேற்பு அளிப்பார்கள்? 'எல்லாம் படித்த புலவனாயிற்றே; ஒழுக்கத்தில் சிறந்தவன் ஆயிற்றே" என்று எண்ணி நல்ல மேலாடை இல்லாவிட்டாலும், புலவனுக்கு மரியாதை செய்வார்களா? அப்படி இன்னும் இந்த உலகம் வளரவில்லை. கார் வந்து நின்றவுடன் அதில் வந்து இறங்கிய கற்றறியா மூடனுக்குக் கைலாகு கொடுத்து வரவேற் பார்கள். பன்னிரைத் தெளிப்பார்கள். பூச்செண்டைச் செருகி மூன்று நான்கு பேர்களாக உள்ளே அழைத்துப் போவார்கள். படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றைவிடப் பணமே உலகில் மதிப்பைப் பெறுகிறதென்பதற்கு இது அடையாளம் அல்லவா? பணக்காரன் தன்னிடத்தில் உள்ள பணத்தை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் படாடோபமான ஆடைகளை அணிகிறான். 335