பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 ஒழுக்கத்தில் தளர்ந்தவனாக இருந்தாலும், அறிவிலே குறைந்த வனாக இருந்தாலும் அவன் தன்னிடத்திலுள்ள பணத்தை ஆடை யாலும் அணியாலும் ஆடம்பரத்தாலும் விளம்பரம் செய்து கொள்வதைக் கண்டு உலகம் மயங்குகிறது. இதை நினைந்து ஒரு புலவர் வேடிக்கையாக ஒரு பாட்டுப் பாடுகிறார். உலகிலுள்ள மனிதர்கள் மாத்திரமா மயங்கு கிறார்கள்? எங்கேயும் இத்தகைய இழிநிலை காணப்படுகிறது. பாற்கடல் இத்தகைய காரியம் ஒன்றைச் செய்தது என்று அவர் பாடுகிறார். "எவ்வளவு ஆயிரம் நூல்களைப் படித்த புலவனா னாலும் இவ்வுலகம் அவனை மதிக்காது. நல்ல மேலாடை அணியாமல் வந்த புலவனை மதிப்பவர் அதிகமாக இருக்க மாட்டார்கள்' என்கிறார். - பெரிய பிரசங்கிகள்கூடத் துப்பட்டா, சால்வை முதலியன போர்த்துக் கொண்டு வருவதற்கு காரணம், சபையினர் தம்மை மதிக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் தம்முடைய மதிப்பைப் பேச்சினால் புலப்படுத்தலாம். அதற்கு முன்பு அவர்கள் சபையில் போகவேண்டும் அல்லவா? அதற்குச் சால்வை முதலியன விளரம்பரமாக உதவுகின்றன. "மேலாடை இன்றிச் சபைபுகுந் தால்இந்த மேதினியோர் நூலா யிரம்படித் தாலும்எண் ணார்.' இப்படி அந்தப் புலவர் சொல்லிவிட்டு இதற்கு உதாரணம் சொல்கிறார். இது இந்த உலகத்தில் மாத்திரம் நடப்பது அல்ல. தேவலோகச் செய்தியும் அப்படித்தான். திருப்பாற்கடல் என்ன செய்தது தெரியுமா? 'துவல் பாற்கடலோ மாலோன் அணிந்தபொன் னாடையைக் கண்டு மகளைத்தந்தே." பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து கொண்டு வந்தார் திருமால். அவரது ஆடம்பரத்தைக் கண்டு மயங்கி அவருக்குத் தான் பெற்ற திருமகளைத் தந்ததாம். திருமாலைப் பாற்கடல் மருமகன் ஆக்கிக் கொண்டது. ஆனால் திருப்பாற்கடலைக் கடையும்போது சிவ பெருமானும் வந்தான். அந்தப் பரமேசுவரன் எதைப் பெற்றான் தெரியுமா? பாற்கடல் தன்னிடத்தில் உண்டான ஆலகால விடத்தைக் 338