பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை கொடுத்தது. திருமாலுக்குத் தன் மகளையும் சிவபெருமானுக்கு நஞ்சையும் கொடுத்ததற்குக் காரணம் என்ன? சிவபெருமான் அந்தச் சபைக்கு வரும்போது பட்டுப் பீதாம்பரம் உடுத்துக் கொண்டு வரவில்லை. பொன்னாடை வேண்டாம்; சாதாரண நூல் ஆடையேனும் கட்டிக் கொண்டு வந்தானா? அதுவும் இல்லை. தோல் ஆடையைப் புனைந்திருந்தான். அதையாவது நாகரிகமாக அணிந்து கொண்டு வந்தானா? அதுவும் இல்லை. சும்மா சுற்றிக் கொண்டு வந்திருந்தான். ஆகையால் அது நஞ்சைக் கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 'ஆலாலம் ஈந்தது தோலாடை சுற்றும் அரன்றனக்கே’’ என்று புலவர் பாடுகிறார். தோல் ஆடை சுற்றி வந்த சிவ பெரு மானைப் பார்த்த பாற்கடல், இந்தப் பைத்தியம் உலகத்தில் இருந் தால் என்ன? செத்துப் போனால் என்ன? என்று நினைத்ததோ என்னவோ, ஆலகால விடத்தை அளித்து விட்டதாம். செல்வத்தின் மதிப்பு நல்ல மேலாடையும், பொன்னாடையும் இல்லை என்றால் இந்த உலகத்தினர் அந்த மனிதனை மதிப்பது இல்லை. பணம் இருந்தால் போதும்; எல்லா வகையான சுகபோகங்களையும் தேடிக் கொள்ளலாம்; பதவியும், பெருமையும், மதிப்பும் அவர் களைத் தேடிக் கொண்டு வரும். இது எல்லாக் காலத்திலும் உண்டு. இப்போது மிகுதியாகிவிட்டது. அதனால் பொருட் செல்வத்தைக் குவித்துக் கொள்ளும் ஆசை இந்தக் காலத்தில் மிகவும் விரிந்திருக்கிறது. உலகமே காஞ்சனத்திற்கு அடைக்கலம் ஆகிவிட்டது. இன்று பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டால் அவன் மதிப்பது இல்லை. ஒர் அணாக் கொடுத்தால் அப்படிக் கொடுத்தவனுக்கு ஒன்பது கும்பிடு போடுகிறான். ஏழைகளுக்கே பணத்தாசை இருக்கிறதென்றால பணக்காரனைப் பற்றி என்ன சொல்வது? ஒர் ஏழைக்கு ஒரு ரூபாய் கிடைக்கிறது. தன் உண்டியில் 99 ரூபாய் சேர்த்து வைத்திருப்பவன் இருக் கிறான்; அவனுக்கும் ஒரு ரூபாய் கிடைக்கிறது. ஏழையோ கிடைத்த ஒரு ரூபாயை உடனே செலவழித்துவிடுவான். 99 ருபாய் சேர்த்து வைத்திருப்பவனோ இந்த ஒரு ரூபாயையும் 337