பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தேரையும் கரியையும் பரியையும் சேர்த்துப் படையைப் பெருக்கியவன் சும்மா இருக்கமாட்டான். இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா என்பார்கள். இரும்பு என்பது படைக்கலத்தைக் குறிப்பது. படையை வைத்துக் கொண்டிருக்கிறவன் அமைதியாக வீட்டில் இருக்கமாட்டான். ஊரைச் சுற்றி வீட்டைச் சுற்றியுள்ள எல்லோரையும் அடிமைப் படுத்த வேண்டுமென்று திரிவான். அவனை யார் எதிர்ப்பட்டாலும் அவருக்குத் தீங்கு உண்டாகும். பிறருக்குத் தீங்கை விளைவிக்கும் மனிதன் தனக்கும் தீங்கை விளைத்துக் கொள்கிறான்.

        • ,

2 இத்தகைய அரச பதவியையும், செல்வத்தையும் நிலையாதன என்று அறியாமல் நீளும் பணத்தாசை பிடித்து அலைகிறாயே, பாவி நெடுநெஞ்சமே என்று அருணகிரியார் சொல்கிறார். தண்டு தாவடி போய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே! நெடுநெஞ்சம் நாம் செய்கிற காரியங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரண மாக இருப்பது நெஞ்சு. நாம் செய்வன யாருக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நெஞ்சுக்குத் தெரியாமல் இராது. 'தன் நெஞ்சு அறிவது பொய்யற்க” என்பார் திருவள்ளுவர். அதனால் வேறு ஒன்றைப் பார்த்துச் சொல்வதைவிட மூலக் கருவியாகிய நெஞ்சையே பார்த்து அருணகிரியார் சொல்கிறார். நெடு நெஞ்சமே! 'நெஞ்சமே, நீ என்னுடன் நீண்ட காலமாக வாழ்கிறாய். இந்த உடம்போடு வந்தாய் என்பது மட்டுமன்று. நான் எடுக்கும் பிறவிகளில் எல்லாம் துணையாகவும், சாட்சியாகவும் தொடர்ந்து வருகிறாய். இந்த நீண்ட நட்பு எனக்கும் உனக்கும் இருக்கிறது" என்று எண்ணியே நெடு நெஞ்சமே என்றார். இதற்கு மற்றொரு பொருளும் சொல்லலாம். நமக்கு உடம்பு, வாக்கு, நெஞ்சு ஆகிய மூன்று கரணங்கள் இருக்கின்றன. இந்த மூன்றில் நம்முடைய 34C