பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை உடம்பு ஒர் எல்லைக்குள்தான் இயங்கும். நம்முடைய கை ஒர் எல்லைக்குள்தான் எட்டும். நான் இந்த இடத்தில் இருந்து பேசுகின்றேன். இதே சமயத்தில் என் வீட்டில் இருக்க முடியாது. இந்த உடம்பு ஒர் எல்லைக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. ஆனால் உடம்பினால் எட்ட முடியாத எல்லையை வாக்கினால் எட்ட முடியும். அதற்கும் ஒர் எல்லை உண்டு. ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்கும். 'என் நெஞ்சில் இருக்கிறது; சொல்ல வர மாட்டேன் என்கிறதே" என்று சில சமயங்களில் சொல்கிறோம். அப்போது வாக்குக்கு எட்டாத ஒன்று உண்டென்று தெரிகிறது. தித்திப்பு என்பது என்ன என்று கேட்டால் சர்க்கரை மாதிரி இருக்கும் என்று சொல்லலாம். தித்திப்பு என்பது இதுதான் என்று வாக்கினாலே சுட்டிக் காட்ட முடியாது. வாக்குக்கு எட்டாத எல்லையில் அநுபவம் இருக்கிறது. வாக்கினது எல்லையையும் கடந்து நெஞ்சு செல்லும். இங்கிருந்தபடியே நெடுந்துரத்தில் இருக்கிற ஒரு பொருளை நெஞ்சு நினைக்கும். உடம்பு நீளுவதை விட வாக்கு நீளும்; வாக்கு நீளுவதைவிட மிக அதிகமாக நெஞ்சு நீளும். அதனாலே, 'நெடு நெஞ்சமே ' என்று சொன்னார் என்றும் கொள்ளலாம். வாமனராகக் குறுகிய உருவம் தாங்கி வந்த திருமால் மூன்று உலகங்களையும் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டார். அவர் திரிவிக்கிரம அவதாரம் எடுத்துக் கொண்டு தம்முடைய இரண்டு அடியினால் மூன்று உலகங்களையும் அளந்தார். அதைக் கேட்டு நாம் வியக்கிறோம். ஆனால் நம்முடைய நெஞ்சமோ இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. ஆயினும் ஒரே விநாடியில் மூன்று உலகங்களையும் அளந்துவிடும் வகையில் அது நீளுகிறது. அதன்பால் உண்டாகிற ஆசை எல்லை இல்லாமல் விரிகிறது. ஆசை என்னும் காலால் மூன்று உலகத்திற்கும் மேலேகூட அளக்கும் ஆற்றல் நம் நெஞ்சுக்கு இருக்கிறது. எல்லையற்று விரிந்துகொண்டு போகும் ஆசையை அழித்து, பற்றை அழித்து, திருவருளை அளக்கிற நெஞ்சங்களே நல்ல நெஞ்சங்கள். நம்முடைய நெஞ்சமோ உலகத்திலுள்ள சொத்துக் களை நாம் பெறவேண்டுமென்று அளந்து கொண்டிருக்கிறது. தேரும், கரியும், பரியும் கொண்டு போருக்குச் சென்று செல் வத்தைப் பலவகையிலும் சேர்த்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவர்களுடைய செல்வம் நீரில் எழுத்துப் போல அழிந்து 341