பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை வதற்குச் செல்வம் வேண்டுமென்ற நினைப்பிலே அதனை நிறையச் சேமித்துக் கொண்டிருக்கிறவர்கள் நன்றாக வாழ்கிறார்களா என்று சற்று ஆராய்ச்சி செய்தால் உண்மை விளங்கும். செல்வத்தைப் பெற்றவர்களுக்குத் திருப்தி உண்டாவதில்லை என்று முன்னரே சொன்னேன். அதனால் குமருகுருபர முனிவர் "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்றும், 'அல்கா நல்குரவு அவா எனப்படுமே என்றும் கூறினார். மனத்தில் உண்டாகிற திருப்திதான் செல்வம், மேலும் மேலும் வேண்டுமென்ற ஆசையே வறுமை என்று அவர் சொல்கிறார். எத்தனை செல்வம் இருந்தாலும் அவன் செல்வனாக வாழாமல், 'இன்னும் நமக்குப் போத வில்லையே!' என்று ஏழையாகவே வாழ்கிறான். உலகம் ஏழை என்று நினைத்திருந்தாலும், 'நமக்குக் கிடைத்தது போதும். இறைவன் இந்த அளவுக்கு நம்மை வைத் திருக்கிறானே' என்று திருப்தியாக வாழ்கிறவர்களே மனத்தில் செல்வர்களாக ஆகிறார்கள். செல்வம் சேரச் சேர அவர்களுக்குக் கவலைகளும் சேர்ந்து விடுகின்றன. மனத்தில் அமைதி குலை கிறது. பொருட்செல்வம் மனத்தில் அமைதியைத் தராது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட பெரியவர்கள் அதைத் தருகின்ற வேறு செல்வம் எது என்று ஆராய்ந்தார்கள். இறைவனது திரு வருட்செல்வம் உலக வாழ்க்கையிலும் சிறந்த இன்பத்தைத் தரும் என்று கண்டு கொண்டார்கள். அதனைக் கண்டு கொண்டவரிலே அருணகிரியாரும் ஒருவர். எது மன அமைதியைத் தரும் என்பதை இந்தப் பாட்டில் சொல்கிறார். 3 உலகத்துப் பொருட் செல்வத்தை மதிக்காத அருட் செல்வர் கள் தாம் அமைதியைப் பெறுவதோடு பிறருக்கும் அமைதியைத் தருகின்ற ஆற்றல் படைத்தவர்கள். அமைதி இல்லாத மக்கள் அமைதியைப் பெறவேண்டுமானால் தாமாகப் பெற்றுக் கொள்ள முடியாது. அமைதியைப் பெற்ற தொண்டர்களுடைய கூட்டத்தில் சேருவதால் பெறமுடியும். அருட்செல்வம் பெற்ற தொண்டர் களைச் சார்ந்தால்தான் கதி உண்டு என்பதை அருணகிரியார் வற்புறுத்துகிறார். க.சொ.111-23 343