பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறு இலை, காண். தொண்டர்களின் நிலை தொண்டர்களுக்கு முத்தியைப் பெற்ற பிறகுதான் இன்பம் உண்டு என்பது இல்லை. அவர்கள் இந்த உலகத்திலேயே இன்பத்தைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு கணமும் அமைதியோடு வாழ்கிறார்கள். வறுமை, நோய், கவலை என்பவற்றைக் கண்டு பயப்படுவது இல்லை. அவர்கள் உள்ளம் எப்போதும் நோய் அற்றதாக, வறுமை அற்றதாக, கவலை அற்றதாக விளங்குகிறது. இறைவனுடைய திருவருள் நிச்சயமாக நமக்குத் துணை இருக்கிறதென்ற நினைவு எப்போதும் சுருதி போடுவதால் அவர் களிடம பயம் என்பதே தலைகாட்டுவது இல்லை. 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை' என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். அவர்களைப் பார்த்தால் ஏழை போல இருப்பார்கள். இடையில் கந்தையும், கோவணமும் இருப்பினும் அவர்கள் உள்ளத்தில் உறுதி வைரம் போலப் பாய்ந் திருக்கிறது. அவர்களைப் போன்ற வீரர்கள் யாரும் இல்லை. "ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே, பாரம் ஈசன் பணிஅல தொன்றிலர்; ஈர அன்பினர்; யாதும் குறைவிலார்; வீரம் என்னால் விளம்பும் தகையதோ!" என்று பெரியபுராணக்காரர் வியந்து பாடுகிறார். தொண்டர் பெருமை ஆண்டவனைச் சார்ந்து அவனுடைய அருட் செல்வத்தைப் பெறுவது நல்லது என்று சொல்வதைவிட்டு, தொண்டர் குழாத்தைச் சாருவதுதான் கதி என்று அருணகிரியார் சொல்கிறாரே என்ற கேள்வி எழலாம். இறைவன் திருவருளை நேரே பெறுவது என்பது அரிய காரியம். அந்த அருளைப் பெறுவதற்கு எத்தனையோ தகுதி வேண்டும். செல்வத்தையும், செல்வம் படைத்தவர்களையும் 344