பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்; இறைவரோ தொண்ட ருள்ளத் தொடுக்கம்; தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' ஒளவையாருடைய கருத்தைக் கொண்டு பார்த்தால் எல்லா வற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிற பரமேசுவரனைத் தம்முடைய உள்ளத் தாமரையில் அடக்கிக் கொண்டமையினால் தொண்டர்கள் பெரியவர்கள் என்று தெரிகிறது. ஒரு பெட்டிக்குள் ஏதேனும் ஒரு பொருள் அடங்கியிருந்தால் அந்தப் பொருளைக் காட்டிலும் பெட்டி பெரிது என்று சொல்ல வேண்டியது இல்லை. அப்படியே இறைவனைத் தம் உள்ளே அடக்கிக் கொண்ட பெரிய பெட்டியாகிய தொண்டர்கள் பெரியவர்கள் என்று சொல்வது ஒருவகையில் பொருத்தமாக இருக்கிறது. இனி வேறு ஒரு வகையில் தொண்டர்களின் பெருமையை நாம் உணரலாம். பெரிய புராணம் புராணங்கள் பதினெட்டு என்று சொல்வார்கள். அவற்றை மகாபுராணங்கள் என்பது வழக்கம். அவை அல்லாமல் உப புராணங்கள் பல உண்டு. புராணங்கள் யாவுமே இறைவனுடைய பெருமையை விரிவாக எடுத்துச் சொல்வன. இறைவனுடைய திருவிளையாடல்களையும், அடியார்களுக்கு அருள் செய்த திறத்தையும் பல படியாக, வரலாறுகளாக எடுத்துச் சொல்வன அவை. இந்தப் புராணங்களையும், உப புராணங்களையும் அன்றி அந்த அந்தத் தலங்களுக்குத் தனித்தனியே புராணங்கள் உண்டு. அவை தல புராணங்கள். தமிழ்நாட்டில் தலங்கள் மிகுதி. ஆகையால் தமிழிலுள்ள தல புராணங்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை. சில தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் உண்டு. கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்பெறும் சிதம்பரத் திற்கு நான்கைந்து புராணங்கள் இருக்கின்றன. அப்படியே மதுரைத் தலத்திற்கு நான்கு புராணங்கள் இருக்கின்றன என்று எனக்கு நினைவு. இப்படிப் புராணம் என்ற பெயரிலே மூன்று வகையாக அமைந்த நூல்கள் யாவும் இறைவனுடைய பெரும் புகழை விரிவாகச் சொல்கின்றன. இந்தப் புராணப் பெருங் 347