பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை ஒர் அரசனோடு பகை கொண்டால் நாம் நம்மைப் போன்ற வேறு ஒரு மனிதனோடு பகை கொள்ள வேண்டுமென்ற நினைவு உண்டாகி விடுகிறது. அவன் ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டு மென்று நினைத்தால் நாம் ஒரு வீட்டைக் கைப்பற்ற வேண்டு மென்று நினைக்கிறோம். அவனும் தன் எண்ணம் கைகூட வில்லையே என்ற கவலையினால் தூங்காமல் இருக்கிறான். நாமும் அப்படியே இருந்துவிடுகிறோம். கடைசியில் அவர்கள் ஈட்டுகின்ற செல்வம் நீரில் எழுதிய எழுத்துப் போல மறைந்து விடுகிறது. நாம் ஈட்டிய செல்வமும் அப்படியே மறைந்துவிடு கிறது. நீரில் பெரிதாக எழுதலாம்; சிறிதாக எழுதலாம். இரண்டும் அழிந்து போகின்றன. அரசன் ரதகஜதுரக தாதிகளைக் கொண்டு பெரும்போர் செய்து சேர்த்துக் கொள்கிற செல்வம் ஒரு கணத்தில் போய்விடும். அவன் நாட்டை இழக்கின்ற அந்தக் கணத்தில் தன்னுடையது என்று சிறிதும் இல்லாமல் அவன் வறியவன் ஆகிவிடுகிான். 'குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோருர் நண்ணினும் நண்ணுவர்' என்பது அரிய உண்மை. அப்படியே செல்வத்தைச் சேர்த்து வாழ்ந் தாலும் அந்தச் செல்வத்தை நுகர்கின்ற நாம் இந்த உடம்போடு இருக்கப் போவதில்லை. செல்வம் நிலையாதது என்பது மட்டும் அன்று. இந்த வாழ்க்கை நிலைக்குமா? அதுவும் நிலையாமல் இருப்பதே. செல்வம் எல்லாமே நிலையாதன; செல்லும் தன்மை உடையன. ஒருகால் நம்மை விட்டு நீங்காமல் இருப்பதாக இருந்தாலும் நாம் அந்தச் செல்வத்தை விட்டுப் போகின்ற நிலை வந்து விடும். இறந்து பட்டால் நம் வீடு, நம்முடைய நாடு, நம்முடைய செல்வம் எல்லாம் பிறருடையவை ஆகிவிடுகின்றன. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைவிட்டு நாம் செல்ல வேண்டும். - அருட் செல்வம் லின் எல்லாக் காலத்தும் உதவுகின்ற, உயிரோடு ஒட்டி வருகின்ற, செல்வமாகிய அருட் செல்வத்தைச் சேர்த்துக் கொண் டால் எல்லாக் காலத்தும் குறைவின்றி நிறைவான இன்பத்தைத் தரும். அந்தச் செல்வத்தைத் தம்முடைய காணியாக்கிக் கொண்ட 355