பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வர்கள் தொண்டர்கள். அவர்களைச் சார்ந்தால் எல்லா இடத் திலும் எந்தப் பிறவியிலும் கவலையில்லாமல் வாழ இயலும். இதனை எண்ணியே, 'தொண்டர் குழாம் சாரில் கதியன்றி வேறிலை காண் என்று அருணகிரியார் சொன்னார். 4 இனி, யாருடைய தொண்டர் என்ற வினாவுக்கு விடை சொல்கிறார். சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறு இலை காண். பதவியும் பணமும் ரபன்பன் மேலும், கிரெளஞ்ச மலையின் மேலும் ஒளிவிடுகின்ற வேலை எறிந்தவன் என்று முருகப் பெருமானை அடையாளம் காட்டுகிறார். நோயாளியினுடைய நோயை நன்கு அறிந்து, "உனக்கு இதுதான் மருந்து. இதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை' என்று சொல்லும் மருத்துவரைப் போல இந்தத் தொண்டர் குழாத்தைச் சாரில் கதியின்றி வேறு இல்லை என்று அடித்துப் பேசுகிறார். நம்முடைய பாவி நெடு நெஞ்சத்திற்கு வந்த நோய் என்ன? பதவி ஆசையும், பணத்தாசையும் கொண்டு தேரிலும், கரியிலும், பரியிலும் தண்டு தாவடி போய்த் திரிகின்றவர்களுடைய செல்வம் சிறந்தது என்று நினைந்து ஏமாந்து போகிறது இது. அவை நீரில் பொறி என்று அறிவதில்லை. பதவியையும், பணத்தையும் பெரியன என்று கருதுகிறது. இந்த நோய்க்கு மருந்து வேண்டாமை என்பது தான். அந்த மருந்தை வைத்திருக்கிறவர்கள் தொண்டர்கள். அது எப்படித் தெரிகிறது? அந்தத் தொண்டர் குழாம் போற்றுகின்ற மருத்துவத் தலைவன் இந்த நோயைத் தீர்ப்பதில் மிகவும் வல்லவன். சூரனையும் கிரெளஞ்ச மலையையும் தன்னுடைய கதிர்வேலால் எறிந்தவன். - ஆயிரக்கணக்கான அண்டங்களை ஆண்டுகொண்டிருந்தான் சூரன். அத்தனை அண்டங்களுக்கும் ஏகபோக சக்கரவர்த்தியாக வாழ்வதில் அவனுக்கு ஒரு பெருமை இருந்தது. அந்த நிலை 356