பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 தொண்டர்கள். அடியார்களுடைய கூட்டத்தில் வாழ்வதில் நமக்கு ஒரு லாபம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் வாழ்ந்தால் நமக்கு ஒரு குரு கிடைப்பான். குருவின் திருவருள் கிடைத்தால் இறைவன் திருவருள் பின்பு கிடைக்கும். எடுத்தவுடன் குரு நமக்குக் கிடைப்பதில்லை. குருவை அடைய வேண்டுமானால் அதற்குச் சில பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் நம்மிடத்தில் உண்டாவதற்கு அடியார்கள் கூட்டத்தில் பழக வேண்டும். அதனால் நல்ல காரியம் செய்வதற்குரிய நிலை நம்மிடம் உண்டாகிறது. பிறருக்கு அந்த நிலை உண்டாவது இல்லை. கோபத்தினால் வீதியில் நின்று நூறு பேர் கேட்க யாரோ ஒருவரைத் திட்டுகிறோம். ஆனால் இறைவன் திருநாமத்தைப் பிறர் காது கேட்கும்படி சொல்வதற்கு நாணமாக இருக்கிறது. பழங்காலத்தில் நாணம் இருந்ததோ இல்லையோ, இப்போழுது நிச்சயமாக இருக்கிறது. நெற்றியில் திருநீறு அணிவதற்கு நாணம், ருத்திராட்சம் அணிந்து கொள்வதற்கு நாணம், கை தட்டிப் பஜனை செய்வதில் நாணம். இப்படி நம்முடைய நாணம் நல்ல செயல்களில்தான் உண்டா கிறது. இந்த நாணம் போகவேண்டுமானால் அடியார்களுடைய கூட்டத்தில் பழக வேண்டும். அப்படிப் பழகினால் அவர் களுடைய கூட்டுறவால் நாணம் கழன்று போய் நாமும் அவர் களைப் போல இறைவனைத் துதிக்கத் தொடங்குவோம். நம்முடைய குரல் நன்றாக இல்லையே என்று நாணம் உண்டாவது இயற்கை. தனியே பாடினால் நம்முடைய குரலின் குறைப்பாட்டைத் தெரிந்து கொள்கிறார்களே என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இருபது பேர் சேர்ந்து பாடுகிற கூட்டத் தில் நாமும் சேர்ந்து மெல்ல மெல்லப் பாடினால் நம் குரலை யாரும் அறியமாட்டார்கள். தொண்டர் கூட்டத்தில் கலந்து கொண்டு பஜனை செய்யும் போது நம்மை அறியாமல் வாய் முனு முணுக்கிறது; பாடுகிறது. அதனால்தான், 'கூட்டத்தில் கோவிந்தா போடுவது' என்கிற பழமொழி வந்தது. நாணத்தைப் போக்குவதற்கும், சோம்பலைப் போக்குவதற்கும் அடியார்களுடைய தொடர்பு மிக அவசியம். அந்தத் தொடர்பு முறுக முறுகக் குருநாதனைத் தேடுகின்ற ஆர்வம் உண்டாகும். குருவினுடைய திருவருள் கிடைத்தால் ஆண்டவனது பேரருள் கிடைக்கும். 358