பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை கோயிலும் கும்பமும் கோயில் கோபுரத்தின் மேல் ஒரு கும்பம் உச்சியில் இருக்கிறது. வெறும் கும்பத்தைத் தனியே நிறுத்த முடியாது. கும்பத்தைத் தாங்கக் கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தைத் தாங்குகிற கட்டிடத்தைக் கட்டுவதற்கு அஸ்திவாரம் அவசியம். கும்பத்தைவிட அகன்றது கோபுரம். கோபுரத்தைவிட அகன்றது கட்டிடம். கட்டிடத்தைவிட அகன்றது அஸ்திவாரம். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழும்போது, கட்டிடம் இன்றிக் கும்பமும் இல்லை. கும்பத்தைப் போல இருப்பது லிங்க பக்தி. கோபுரத்தைப் போல இருப்பது குரு பக்தி. அஸ்திவாரத்தைப் போல இருப்பது தொண்டர்களுடைய பக்தி. தொண்டரிடத்தில் பக்தியாகிய அஸ்திவாரம் நன்றாக அமையு மானால் குரு பக்தி, லிங்க பக்தியாகிய கட்டிடமும், கும்பமும் நன்றாக எழும். முந்திய இரண்டும் நல்லவகையில் அமைந்து விட்டால் நிச்சயமாக இறைவனுடைய பக்தியாகிய கும்பம் பிரகாசிக்கும். அதனால் திருவருள் கிடைக்கும். 'அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே” என்று தாயுமானவர் பாடுகின்றார். கங்கை இமாசலத்தில் தொடங்குகிறது. கடலில் போய்ச் சேருகிறது. கங்கையிலே போட்ட பொருள் கடலில் போய்ச் சேருவது போலத் தொண்டர் குழாத்துடன் சேர்ந்தால் மெல்ல மெல்லக் குருவின் திருவடியை அண்டி, இறைவன் அடியைச் சாரலாம். எப்படியாவது கங்கையின் தலைப்பைச் சார்ந்துவிட வேண்டும். 'எங்கெங்கோ மயங்கிப் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப் பட்டு அவற்றின் நிலையாமையை உணராத பாவி நெஞ்சமே! பல காலமாக எனக்கு அருகில் நின்று நெடுந்துரம் ஆசை என்றும் கையை நீட்டிவிடுகின்ற நெடு நெஞ்சமே பணமும் பதவியும் நீரில் எழுத்துக்கு நிகராகும். அவற்றைப் பெரியனவாக மதித்த அசுரர்களை ஞான வேலால் அழித்த எம்பெருமானுடைய தொண்டர்களைச் சார்ந்தாலன்றி உனக்கு ஒரு கதியும் இல்லை. க.சொ.111-24 359