பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பயன் உண்டு. மறுமையின்பமாகிய பிறவாதபேறும், இம்மை யின்பமாகிய வறுமையில்லா வளவாழ்வும் கிடைக்கும். 女 முடியாப் பிறவிக் கடலில் புகார்;முழு தும்கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார்;வெற்றி வேற்பெருமாள், அடியார்க்கு நல்ல பெருமாள், அவுனர் குலம்அடங்கப் பொடிஆக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே! (வெற்றியைத் தரும் வேலைக் கரத்தில் தாங்கும் பெருமாளும், தன்னைப் பணியும் அடியவர்களுக்கு நன்மையைச் செய்யும் நல்ல பெருமாளும், அசுரர் குலம் முற்றும் அழித்துப் பொடி ஆக்கிய பெரு மாளுமாகிய முருகனுடைய திருநாமத்தை விரும்பிச் சொல்கிறவர்கள், என்றும் முடியாமல் தொடர்ந்து வரும் பிறவியாகிய கடலிலே விழமாட்டார்கள். ஒருவரிடம் உள்ள எல்லாவற்றையும் அழியச் செய்யும் வறுமையினால் உலகத்தில் துயரம் அடைய மாட்டார்கள். மிடி - வறுமை. படி - உலகம். விதனம் - துயரம். அவுணர் - அசுரர். அடங்க - முழுதும். புகலுதல் - விரும்புதல், சொல்லுதல்; இங்கே, விரும்பிச் சொல்லுதல். மறுமை வாழ்வும் இம்மை வாழ்வும் பெறுவர் என்பது கருத்து.) 28