பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் 1 மனிதனுடைய வாழ்நாளில் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் மாறி மாறி வருகின்றன. தங்களுக்கே ஆண்டவன் மிகுதியான துன்பங்களை தருகிறான் என்றும், மற்றவர்களுக்கு இத்தகைய துன்பங்கள் உண்டாவது இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள். இறைவனுக்கு அப்படிப் பட்சபாதம் இல்லை. அவரவர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்றபடியே இன்ப துன்பங்களை அவன் கொடுக்கிறானேயன்றி, அவர்கள் அநுபவிக்க வேண்டாதவற்றைக் கொடுக்கவில்லை. சிலர் அதிகமான துன்பங்களை அநுபவிக்கிற வரைப் போல வேதனைப்படுவார்கள்; ஆராய்ந்து பார்த்தால் அது மிகவும் சிறிய துன்பமாக இருக்கும். சன்னி பிறந்தவன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க, ஜலதோஷம் பிடித்தவன் படுகிற வேதனை மிக அதிகமென்று தோன்றும். துன்பத்தின் அளவு பெரும்பாலும் செல்வம் நிரம்பியவர்கள் சிறிய துன்பம் வந்தாலும் பெரிதாகக் கத்துகிறார்கள். ஒரு வேளை காபி சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் அவர்கள் அலறுகின்ற அலறல் மிகுதியாக இருக்கும். பத்து நாளாக உண்ண ஒன்றும் கிடைக்கா மல் பசியால் துவண்டும் 'நான் துன்பப்படுகிறேனே!' என்று அரற்றாதவனும் இருக்கிறான். இந்த இரண்டு வகையான மக்க ளுக்கும் பொதுவானவை உடம்பு, மனம் ஆகியவை. ஆனால் ஒரு வகையினர் சிறிய துன்பத்தையும் பெரிதுபடுத்தி வேதனைப் படுவதற்கும், மற்றவர்கள் பெரிய துன்பங்களையும் சிறிய துன்பமாகக்கூடப் பாராமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது அவர் மனந்தான். துன்பமானாலும் சரி, இன்பமானாலும் சரி நாம் நுகர்கின்ற பொருளில் இல்லை. நுகர்ந்து, அதை உணர்கின்ற மனத்தில் இருக்கிறது. எதைத் துன்பம் என்று நினைக்கிறோமோ