பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அது வருமே என்று, வருவதற்கு முன்னாலும் மனம் துன்பப்படு கிறது. வந்து அநுபவித்த பிறகும், "ஐயோ வந்ததே' என்று துன்பப் படுகிறது. ஆகவே துன்பத்தினால் உண்மையில் வேதனைப்படுகிற காலம் ஒன்று என்றால், துன்பம் வராததற்கு முன்பே துன்பம் வருமே என எண்ணி வேதனைப்படுகிற காலம் ஒன்றும், வந்த பிற்பாடு வந்ததே என்று வேதனைப்படுகிற காலம் ஒன்றுமாகக் கோழைகளுக்கு வளர்கிறது. "துன்பம் எப்படியும் வரத்தான் வரும். இந்த உலகத்தில் பிறந்துவிட்டமையால் அத்துன்பங்களுக்கு எப்போதும் ஆயத்தமாக இருப்போம்' என்று யார் இருப்பார்கள்? விதியும் மதியும் 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழ துளுற்று பவர்' என்று வள்ளுவர் சொன்னார். பலர் விதி பெரிதா, மதி பெரிதா என்று சந்தேகப்படுகிறார்கள். 'விதியை மாற்ற யாராலும் முடியாது' என்ற ஒரு சாரார் சொல்ல, மற்றொரு சாரார், 'இல்லை; விதியை மதியால் வென்றுவிட லாம்' என்று சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது உண்மை? விதியை மதி வெல்லுமே யன்றிக் கொல்லாது. விதியைக் கொல்வது வேறு; வெல்வது வேறு. கொல்வதாவது அடியோடு அழித்துவிடுவது. விதியை அடியோடு அழித்து ஒதுக்க யாராலும் முடியாது. விதி என்பது பிராரப்தம். பிராரப்தத்தை யாராலும் கொல்ல முடியாது; ஆனால் தெளிந்த அறிவு இருந்தால் வென்று விடலாம். வினையும் விளைவும் நாம் செய்கிற பாவ புண்ணியம் வேறு; அநுபவிக்கின்ற இன்ப துன்பம் வேறு. இப்பொழுது நுகரும் அநுபவம் முந்திய பிறவி யில் நாம் செய்த வினையின் பயன். இப்பொழுது செய்கின்ற பாவ புண்ணியச் செயல்கள் அடுத்த பிறவியின் அநுபவங்களுக்கு வித்தாகின்றன. முன்னை வினைகள் காரணமாக அநுபவிக்கின்ற போகங்கள் இன்பமாகவும், துன்பமாகவும் அமைகின்றன. முன்னை வினை 3O