பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் அதிகமாக இருக்கிறதோ அங்கே அப்படியே உட்கார்ந்து எல்லாச் சீவராசிகளையும் சங்காரம் செய்த மலை. அந்த மலையை அப்படியே கண்களுக்குத் தெரியாதபடி பொட்டுப் பொட்டாக ஆக்கினான் கந்தன். பூச்சி, பொட்டு என்று சொல்வது மரபு. பூச்சி கண்ணுக்குத் தெரிவது: கண்ணுக்கே தெரியாதது பொட்டு. வெற்பு - மலை. மலை என்ற சொல்லிலிருந்து மலைப்பு என்ற சொல் உண்டாகிறது. மலைப்பை உண்டாக்குவது மலை. பின்னாலே இருக்கும் பொருளை மறைத்து, முன்னால் இருக்கிறவனுக்கு மலைப்பை, அச்சத்தை உண்டு பண்ணும் மலையைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டுப் பொட்டாகப் போகும்படி பொருதான் கந்தன். அவனுடைய அருள் பெற்றவர் களும் அவனைப்போல இருப்பார்கள். 'அரசன் எப்படி, குடி களும் அப்படி' என்பது வழக்கு. அவன் திருவருளைப் பெற்ற வர்கள், மலைபோல் இருக்கும் துன்பங்களைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டாக ஆக்குகின்ற ஆற்றல் அடைவார்கள். நமக்கு அந்த ஆற்றல் வரவில்லை. அதற்குக் காரணம் இன்னதென்பதை அருணகிரியார் சொல்கிறார். தப்பிப் போன மனம் தப்பிப் போனது ஒன்றற்கு எட்டாத ஞான கலைதருவாய். 'என் கைக்குள் ஒன்று அகப்படாததனாலே மலையைப் பொட்டாக்கும் ஆற்றல் எனக்கு இல்லை. அதைப் பிடித்து என் ஆணைக்கு அடங்க வைத்து, ஞான கலையை வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது எனக்கு அகப் பட்டால் அல்லவா ஞானத்தை வாங்க முடியும்?" தப்பிப் போனது ஒன்று. 'அந்த ஒன்று மனம். மனத்தை என் பிடிக்குள் அகப்படுத்தி, உன் திருவடியிலே விழச் செய்து அதற்குக் கொஞ்சம் ஞானம் ஊட்டலாம் என்று எண்ணினேன். அப்படிச் செய்திருந்தால் மலை மலையாக வரும் துன்பங்களைப் பொட்டுப் பொட்டாக ஆக்கியிருப்பேன். ஆனால் அந்த மனம் பிடிக்கு அகப்படாமல் தப்பிப் போய்விட்டதே! அதற்கு எட்டாத ஞான கலையை க.சொ.1II-4 39