பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் பின்னால் நாம் உள்ள இடம் சிறை. பாதுகாப்பான இடத்தில் இன்பம் உண்டாகிறது. சிறையில் துன்பம் அநுபவிக்கிறோம். அதைப் போல மனம் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் இன்பம் பெற்றிருக்கும். நம் கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்ப் பிறருக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்படுகிறது. அதனாலே அதற்கு வருகின்றது துன்பம். வலைப்பட்ட மனம் LDனத்தை நாமே கட்டலாம், கட்டி முருகனிடத்திலிருந்து ஞான கலை கொஞ்சம் வாங்கி ஊட்டலாம் என்று நாம் நினைக்க, அது நம் பிடிக்கு அகப்படாமல் தப்பிப் போகிறது. தப்பிப் போனது ஒன்று யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால் மறுபடியும் அதைக் கட்ட நாம் முயற்சி செய்யலாம். ஆனால் அதுவோ வேறு ஒருவரிடத்தில் கட்டுப்படுகிறது. நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் ஞான கலையை எட்டிப் பிடித்திருக்கும். தப்பிப் போனதனால் அதற்குக் கலைஞானம் எட்டாது போய்விட்டது. வேல்விழியாருக்குக் கட்டுப்பட்டதனால் கிடைத்தது என்ன? மையல் வலை. அவ் வலையை விரித்து நம் பிடிக்குத் தப்பிப்போன மனத்தைச் சிக்க வைத்துச் சிறைப்படுத்திவிட்டனர் கட்டாரி வேல்விழியார். 3 இரும்காமவிடாய்ப் பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும் கட்டாரி வேல்விழியார். இரும் - பெரிய, பரந்த காம விடாய் - காமத்தினால் எழுகின்ற தாகம். காமம் என்பது மனத்திலே தோற்றுகின்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சி வசப்பட்டுக் கட்டாரி வேல் விழியார் வலையில் சிக்குண்டு தடுமாறின உயிர்கள் ஒன்றா இரண்டா? சரித்திரங்களும், புராணங்களும் கதைகதையாகச் சொல்கின்றன. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரைக் கட்டாரி வேல்விழியார் என்ன பாடு படுத்தி விடுகிறார்கள் தெரியுமா? திருகிப் பருகிப் பசி தணிக்கும். 41