பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 உயிரைத் திருகுவதாவது அது போகிற போக்கில் செல்ல விடாமல் தனக்குள் அடக்குவது. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரை அது போகிற போக்கில் போக விடாமல் தனக்குள் அடக்கிப் பசி தணிகிறது விழி. உலகில் உள்ள எல்லோரையுமே வேல்விழியார் அப்படிச் செய்ய முடியுமா? உலகில் காமவிடாய்ப்பட்டவர்களும் இருக்கிறார்கள்; ஞான கலை உடையவரும் இருக்கிறார்கள். ஞான கலை உடையவரி டத்தில் கட்டாரி வேல்விழியாரின் ஜபம் ஒன்றும் சாய்வதில்லை. காமவிடாய்ப்பட்டாருடைய உயிரைத்தான் திருகிப் பருகிப் பசி தணியும். காமவிடாய்ப்பட்டவன் கலாசாலையில் படிப்பவனாய் இருந்தால் படிப்பில் அவன் மனம் ஓடாது. உத்தியோகசாலையில் இருந்தால் வேலையில் மனம் ஒடுகிறது இல்லை. அவன் தன் கடமைகளைச் செய்யும் இடங்களிலெல்லாம் குறுக்கிட்டு வழியை மாற்றி, கடமையைச் செய்யவொட்டாமல் முறித்து, வேல் விழி யாரின் நினைவாகவே எப்போதும் இருக்கும்படி செய்து விடு கிறது. வாழ வேண்டுமென்று அவன் எண்ணினாலும் கொஞ்சங்கூட வாழவொட்டாமல் சிதைத்துவிடுகிறது காமவிடாய். கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனம் கட்டுண்டதே. "என் கைக்குள் அகப்படாமல் தப்பிப்போன மனம் கட்டாரியைப் போலவும், வேலைப் போலவும் இருக்கும் விழியாருடைய வலைக்குள் கட்டுண்டுவிட்டது' என்கிறார் அருணகிரியார். கண் சிறிய உறுப்பு. இருந்தாலும் காமவிடாய்ப் பட்டா ருக்கோ அது பெரிய கட்டாரியைப் போலவும், வேலைப் போல வும் இருக்கிறது. மகளிருடைய கண்கள் பசியோடிருக்கின்றன. யாரைக் குத்தி வலையில் அகப்படுத்தலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. ஆள் அகப்பட்டால் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணித்துக் கொள்கின்றன. ஞானமும் வேலும் பின்னால் இருக்கும் பொருள்களை எல்லாம் மறைத்து, முன்னால் இருப்பவர்களுக்கு மலைப்பை உண்டாக்கிய பெரிய மலையை ஆண்டவன் பொட்டுப் பொட்டாக ஆக்கினான். 42