பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பாலை உண்டவர் அவர். பாலைக் குடித்த உடனே ஞானம் வெள்ளமாகப் பொங்கியது. அது வெறும் ஞானம் அல்ல; கலை ஞானத்தோடு கலந்த மெய்ஞ்ஞானம். சம்பந்தப் பெருமானுக்கு ஞான கலை கிடைத்ததனாலே அவர் தம் அளவில் இன்பத்தை அநுபவிப்பதோடு நில்லாமல் பிறருக்கும் அதை அளித்தார்; ஞானா சிரியராகத் திகழ்ந்தார். வழிவழியாக வந்துகொண்டே இருக்கும் மனித சமுதாயம் தம் காலத்திற்குப் பிறகும் படித்துப் பயனுற்று ஞானம் எய்துவதற்குத் தக்க தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழில் வெள்ளமாகப் பொழியும் ஆற்றலும் அவருக்கு உண்டாயிற்று. கலை ஞானம் பெற்றவர் ஆதலால் அது உண்டாயிற்று. மூன்று வயசு முதலே எம்பெருமான்மீது பல பல திருப் பதிகங்களைப் பாடிக்கொண்டு ஒவ்வொரு தலமாகச் சுற்றிவர ஆரம்பித்தார் சம்பந்தர். அவருக்கு வயசு பதினாறு ஆயிற்று. அந்தக் காலத்தில் மயிலாப்பூரில் சிவநேசர் என்ற பெயருடைய ஒரு செட்டியார் இருந்தார். சிவபெருமானிடத்தில் உண்மையான அன்பு பூண்டு சிவனடியார்களிடத்தில் மிக்க அன்பு உடையவராக இருந்தார். அவர் ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றைக் கேள்வி யுற்று அவரைக் காணவேண்டும், அவருக்குத் தம்முடைய பெண் ணாகிய பூம்பாவையை மணம் செய்து கொடுக்கவேண்டுமென்ற ஆசை உடையவராக இருந்தார். மூன்று வயசிலே புறப்பட்ட சம்பந்தப்பெருமான் ஒவ்வொரு தலமாகச் சென்றுவிட்டுப் பதினாறு ஆண்டு நிரம்பப் பெறும் போது தொண்டை நாட்டுக்கு வந்தார். அதற்குள் இங்கே சிவநேசச் செட்டியாரின் புதல்வி பூம்பாவை ஒருநாள் பூக் கொய்யும்போது அரவம் தீண்டியதால் மாண்டு விட்டாள். 'சீகாழிப் பிள்ளையாருக்கு இவளைக் கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருக்க, இப்படி இறந்து போய்விட்டாளே! ஞான சம்பந்தப் பெருமானுக்கு உரிய பொருளை நான் இப்பொழுது எவ்வாறு ஒப்படைப்பேன்!' என்று செட்டியார் மிகவும் வருந்தினார். "நாம் ஒன்று நினைக்க இறைவன் திருவருள் வேறாக இருக்கிறது. ஆனாலும் நினைத்த காரியத்தைச் செய்யவேண்டும். நாம் பெற்றெடுத்த இந்த உடம்பில் எஞ்சி இருப்பது எலும்பு. அதையாவது அப்பெருமானிடம் 44