பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான கலையும் மையல் வலையும் ஆயிரம் முகம் கொண்டு கண்டார். "அவள் என் மகள்' என்று கூறி அப்பெண்ணை மணக்க மறுத்தார். ஞான கலை படைத்தவர்களின் கண்களில் படுகின்ற கட்டாரி வேல்விழியார் அவர்களை என்ன செய்ய முடியும்? பெண்களைக் காண்பதால் காமவிடாய்ப் படுகிறவர்கள் ஞானம் இல்லாதவர்கள். அப்பெண்களின் விழி அவர்களது உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும். ஞான கலை பெற்ற ஞானிகளோ அவர்களைத் தங்கள் சேய் போலப் பார்த்துவிடுகிறார்கள். காமம் உண்டாக வழி ஏது? அருணகிரியார் பிரார்த்தனை இதை உணர்ந்து நமக்கு உணர்த்துபவர் போல அருண கிரியார் இப்பாட்டில் பாடுகிறார். "பெரிய மலையைப் பொட்டுப் பொட்டாக ஆக்கிய கந்தனே! நான் என் மனத்தைத் கட்டலாம் என்று எண்ணினேன். அது எனக்குத் தப்பிப் போய்விட்டது. தப்பிப் போனது மாத்திரம் அல்ல. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல்விழியார் வலையில் சிக்குண்டு விட்டது. இப்பொழுது நான் என்ன செய் வேன் ஞானகலை உடையவனாய் இருந்தால் மலை மலையாகத் துன்பம் வந்தாலும் உன்னைப் போல் பொட்டுப் பொட்டாக ஆக்கிவிடுவேனே இல்லாததனால் அல்லவா காமவிடாய்ப்பட்டேன்? மாதர்களுடைய சிறிய உறுப்பாகிய கண் என் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரியாகவும், வேலாகவும் இருக் கிறது. என் கைக்குள் அகப்படாமல் தப்பிப்போன மனமாகிய ஒன்றிற்கு எட்டாத ஞானகலையைத் தருவாய் அப்பா!' என்று பிரார்த்தித்துக் கொள்கிறார். பொட்டாக வெற்பைப் பொருதகந் தாதப்பிப் போனது.ஒன்றறற்கு எட்டாத ஞான கலைதரு வாய்;இரும் காமவிடாய்ப் பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும் கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனம் கட்டுண்டதே! 49