பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை புத்தியினால் இது நல்லது, இது பொல்லாதது என்று தெரிந்து கொள்கிறோம். மனம் என்னும் பகுதி பலவற்றைப் பற்றிப் பற்றித் தாவிக்கொண்டிருக்கும். அது பொல்லாதது. அதனால் பலவகைத் துன்பங்கள் உண்டாகின்றன. புத்தியால் நல்லது எது என்று தெரிந்துகொண்ட பிறகு அதனிடம் ஒற்றுமைப்பட்டு நிற்கத் தீர்மானிப்பது சித்தம். புத்தியானது கூர்மையாக ஒரு விஷயத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால்தான் அதைப் பற்றி நிற்கச் சித்தம் முந்தும். அழுக்கைப் போக்கும் வழி பிறவியாகிய அழுக்குக் கடல் ஒரு பக்கம் இருக்கிறது. அதற்கு நேர் எதிரே ஆனந்தம் என்ற பெரிய வாரி இருக்கிறது. இந்த இரண்டுக்கும் நடுவிலே வளைந்து வளைந்து செல்கிறது புத்தியாகிய சிற்றாறு. அது தான் போகிற வழியில் பல பல அழுக்குகளை மேலும் மேலும் திரட்டிக் கொண்டே போகிறது. இந்தப் புத்தியாகிய அழுக்கு நீரை உடைய சிற்றாற்றை உடைய வனிடம் ஒரு பெரியவர் வந்தார். 'என்ன அப்பா இந்த அழகான சிற்றாற்றை உனக்குப் பயன்படாதவாறு ஒரே அழுக்கு நீர் ஒடும்படி வைத்துக்கொண்டிருக்கிறாயே; இப்படி இருக்கலாமே?” என்று கேட்டார். அவனுக்கும் அந்த ஆற்று நீர் ஒரே அழுக்காக இருக்கிறது தெரியும். ஆனால் அதை எப்படிச் சுத்தம் செய்வது என்றுதான் தெரியவில்லை. ஆகவே அப்பெரியவரிடமே, "இந்த ஆற்றை எப்படிச் சுவாமி சுத்தம் செய்வது? அழுக்குக் கொஞ்சமும் இல்லாமல் செய்ய வேண்டுமானால் என்ன பண்ணுவது?’ என்று கேட்டான். 'அழுக்கு நீரை வடிகட்டிச் சுத்தம் பண்ணலாம் என்றால் அது உன்னால் முடியாது. அதைத் தெளிய வைத்துச்சுத்தம் செய்யும் பெரிய கடல் ஒன்று இருக்கிறது. அதிலே போய்க் கலக்கச் செய்துவிட்டால் சுத்தமாகி விடும்' என்று அவர் சொல்லிச் சென்று விட்டார். அவன் தன்னுடைய புத்தியாகிய சிறிய ஆற்றைப் பெரிய வாரியோடு கலக்கச் செய்யலாம் என்று எண்ணி, துறை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு கிளம்பினான். பிறவியாகிய 53