பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை தெளிவு பெற வழி அலை ஒய்ந்த பின் கடலில் நீராடலாம் என்றால் அலையும் ஓயாது. நீயும் நீராட முடியாது. உன் அறிவாகிய ஆறு தெளிந்தபின்தான் ஆனந்தவாரியோடு கலக்க வேண்டும் என்று நீ எண்ணிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இப்படியே போய்க் கலக்க வேண்டியதுதான். ஆனந்தவாரியோடு கலக்கப் பல துறைகள் இருக்கின்றன. என்றாலும் ஞானமாகிய பாலை வனத் துறை வழியே செல்லும்போது அறிவாகிய ஆறு சுவறி விடக் கூடும். கர்மமாகிய மேட்டு நிலத் துறையின் வழியாகப் போக வேண்டுமென்றால் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஏறக் கூடிய சக்தி உன் புத்தியாகிய ஆற்றுக்கு இல்லாமற் போனாலும் போக லாம். அவ்வெல்லாத் துறைகளையும்விட மிக எளிய துறை பக்தி, அதன் வழியாக உன் சிற்றாற்றை விட்டுவிடலாம்' என்று சொன் னார். 'பக்தித் துறை வழியே சென்றால் முன்னால் நன்னீர்க் கடல் தெரியும். அதுவே ஆனந்த வாரி' என்றும் உணர்த்தினார். அவனுக்கு மறுபடியும் ஒரு சந்தேகம் பிறந்தது. 'அந்த நல்ல கடலோடு என்னுடைய புத்தியாகிய அழுக்கு ஆற்றை எப்படிக் கலக்கச் செய்வது? அதனால் அந்த ஆனந்தவாரி அசுத்தமாகி விடாதா? தெளிந்த நீர் ஒடுகின்ற ஆறானால் கலப்பதனால் ஒன்றும் கெடுதி இல்லை. ஆனந்த வாரியோடு கலப்பதற்கு ஏற்ற வகையில் என்னுடைய புத்தியாகிய சிறிய ஆற்று நீரை நான் தெளிய வைத்துக் கொள்ள வேண்டாமா?' என்று கேட்டான். & & 'அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் சொன்னேன்? அந்த ஆனந்தவாரியோடு கலப்பதனாலேயே உன் அறிவாகிய சிற்றாறு சுத்தமாகிவிடும்' என்று சொல்லி அதைப் பின்னும் விளக்கினார். r - யமுனையும் சாக்கடையும் 'யமுனை நெடுந்துரம் ஒடிக் கங்கையோடு கலந்து விடு கிறது. கங்கையோடு கலக்கும் இடம் வரையில் அது யமுனையாகத் தான் இருக்கிறது. கங்கையோடு கலந்த மாத்திரத்திலே அது யமுனை என்ற பெயரையும் இழந்து கங்கையாகவே ஆகிவிடு கிறது. இந்தக் காலமாக இருந்தால் எப்படியோ? திருவாங்கூரோடு 57