பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 யார் என்பது அவற்றுக்குத் தெரிகின்றது. எசமானன் அடிக்கு வருகிறான், தடவிக்கொடுக்க வருகிறான், உணவு போட வருகிறான், தன்னுடைய குட்டிக்குப் பால் கொடுக்க வேண்டும், என்ற எண்ணங்கள் அவற்றுக்கும் இருக்கும்போது அவற்றுக்கு மனம் இல்லை என்று சொல்லக் கூடாது. ஆனால் புத்திக்கூர்மை, அறிவு நுட்பம் இல்லை என்று சொல்லலாம். இதைச் செய்ய வேண்டும், இன்னதை ஒழிக்க வேண்டும் என்று பகுத்துப் பார்க்கின்ற நுண்ணறிவு, அறிவின் கொழுந்து, அவற்றினிடம் காணப்படவில்லை. மனிதனும் ஆராய்ந்து பார்க்கின்ற அறிவை விட்டுவிட்டால் விலங்காகத்தான் ஆகிறான். 'தக்க இன்ன தகாதன இன்னவென் றொக்க உன்னல ராயின் உயர்ந்துள மக்களும் விலங்கே’’ என்பர் கம்பர். விலங்கைக் காட்டிலும் மனிதன் உயர்ந்தவன் என்று சொல் வதற்குக் காரணம், பிராணிகளிடம் இருக்கும் ஐந்து அறிவையும் விடச் சிறந்த ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு அவனிடத்தில் இருக்கிறது. கலங்கிய புத்தி புத்தியில் எப்போதும் அலை அடித்துக்கொண்டிருக்கிறது. பல தரங்கங்களை உடையது புத்தி. இது நல்லது, இது கெட்டது என்று எண்ணி எண்ணித் திண்மையில்லாமல் ஐயம் அடைகிறது. அதனால் பிறவிக்குக் காரணமான பல இயல்புகளை மேற்கொண்டு பிறந்து இன்ப துன்ப வாழ்க்கையில் அல்லற்படச் செய்கிறது. எப்போதும் நிரதிசய ஆனந்தமுள்ள வேறோர் இடம் உண்டு. அதுதான் ஆனந்தவாரி. அதைச் சேர்ந்தால் பிறவி இல்லை. இன்பதுன்பம் இல்லை. இன்பதுன்பத்திற்கு அப்பாற்பட்டிருக் கிறது எதுவோ அதைத்தான் ஆனந்தம் என்று சொல்வார்கள். பிறந்து வாழ்ந்தாலும் இந்தப் பிறவிப் பிணியைப் போக்கும் ஆண்டவனது திருவருளைப் புணையாகக் கொண்டு, யார் பக்தித் துறையிழிந்து செல்கிறார்களோ அவர்கள் ஆனந்தவாரியை அடை வார்கள். அதற்கும் துணையாக இருப்பது புத்தி. பிறவிக் கடலைச் GŠO