பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 பார்க்கும்போதுதான் பயன் உண்டாகிறது. அதைச் சிந்தனை என்று சொல்வர். முதலில் கேட்டல், கேட்ட பிறகு கேட்டதை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தல். கடை வியாபாரி பகலில் கடையில் வியாபாரம் செய்துவிட்டு இரவில் பணத்தை வீட்டில் வைத்துக்கொண்டு நூறு ரூபாய் நோட்டுகளை எல்லாம் தனியாகவும், சில்லறைகளைத் தனியாகவும், செல்லாக் காசுகளைத் தனியாகவும் வைத்துவிடுவது போல, கருத்துக்கு ஒவ்வாதன வற்றை ஒதுக்கிவிடுவார்கள் அறிவாளிகள். காதினாலே கேட்டவற்றை எல்லாம் ஒன்றாகத் தொகுத்துச் சிந்தித்தால் போதுமா? சிந்திப்பதனால் தெளிவு ஏற்பட வேண்டும். இப்படிக் கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்று நான்கு படிகள் சொல்வார்கள். கேட்டபோதே தெளிவு பிறவாது. கேட்டதை நன்றாகச் சிந்திக்கும்போதுதான் பிறக்கும். அந்தத் தெளிவு ஏற்படா விட்டால் கற்பதாலும் கேட்பதாலும் எவ்விதப் பயனும் இல்லை. தெளிவு ஏற்பட்ட பிறகு மேற்கொள்வது நிஷ்டை சத்தியத்தை அடைவதற்குரிய சாதனங்கள் எல்லாமே நிஷ்டை. இறைவன் திருவருளைப் பெறுவதற்கு உரிய முயற்சி அது. தெளிவு வந்த பிறகே அத்தகைய முயற்சியில் ஈடுபட முடியும். கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை, அந்துபவம் என்ற வரிசை கற்றலிவிருந்து தொடங்குகிறது. கேட்பதனால் சிந்தனை ஏற்பட்டு, அதனால் தெளிவு ஏற்பட்டு, நிஷ்டை கூடிய பிறகு அநுபவம் சித்திக்கிறது. புத்தி தெளியாமல் இருந்தால் முயற்சி பயன் பெறாது. ஒரு நிமிஷம் ஞானம் தோன்றும். அடுத்த விநாடியே, 'கடவுளாவது மண்ணாவது! அப்படி ஒன்றும் இல்லை. வயிற்றுப் பிழைப்பை எண்ணிப் பலர் அப்படிப் பேசி வருகிறார்கள்' என்று சொல்லத் தோன்றும். இதற்குக் காரணம் என்ன? புத்தி என்ற ஆறு அத்தனை கலக்கம் உடையதாய் இருக்கிறது. புத்தித் தரங்கம் தெளிந்தால்தான் பிற்பாடு அநுபவம் சித்திக்க வழி ஏற்படும். எப்படித் தெளிவு பெறுவது? ஞானவிசாரத்தாலே பெறலாமா, கர்ம யோகத்தாலே பெறலாமா என்று தவிக்கின்ற மக்களுக்கு, எளிமையான வகையில் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அருணகிரியார் சொல்கிறார். பக்தித் துறையை அறிந்து அதன் வழியே சென்றால் ஆனந்தவாரியில் கலக்கலாம். அப்போது புத்தித் தரங்கம் தெளிந்து 62