பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித் துறை இந்திரனுக்குச் சொந்தமாக இருந்த தேவலோகத்தைச் சூர பன்மன் கைக்கொண்டு ஆண்டான். அவனைச் சங்காரம் செய்து அமராவதியைக் கைப்பற்றினான் முருகன். தாம் இழந்த நாட்டைச் சூரனோடு பொருது மீட்கும் வழி தெரியாமல் திண்டாடினர் தேவர். இந்திரன் தன் சிங்காதனத்தையும் இராசதானியையும் இழந்து தவித்தான். முருகனிடம் யாவரும் சரண் அடைந்தனர். அப்பெருமான் அவர்களுக்காகச் சூரனை அழித்து அமராவதி யாகிய இந்திரனது இராசதானியை மீட்டான். இந்திரனுக்கு வழங்குவதற்காகவே அதைக் கைக்கொண்டான். அசுரராட்சிக்குட் பட்ட அமராவதியை மீட்டும் சுரர் ஆட்சிக்கு உட்படுத்தினான். அவன் அழுக்குக் கடலிலே கலக்கச் செல்கிற புத்தியை ஆனந்த வாரியில் கலக்க வழி காட்டுவான் என்ற நம்பிக்கையோடு இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறார். Yk பத்தித் துறைஇழிந்து ஆனந்த வாரி படிவதனால் புத்தித் தரங்கம் தெளிவது.என் றோ?பொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலே குத்தித் தரங்கொண்டு அமரா வதிகொண்ட கொற்றவனே! (பொங்கிய வெம்மையான இரத்தம் மிகுதியாகக் குதிக்க, வெவ்விய சூரனை, தான் ஏவிய சுட்டியென்னும் படைக்கலத்தால் குத்தி, அதனால் உண்டான சிறப்பை மேற்கொண்டு அமராவதியைக் கைக்கொண்ட வெற்றி மிடுக்குடைய பெருமானே! பத்தி என்னும் துறையில் இறங்கி ஆனந்த மென்னும் கடலில் படியும் முறையினால் என்னுடைய புத்தியாகிய சிற்றாற்றிலுள்ள அலைகள் தெளிவது என்றைக்கோ? இழிந்து - இறங்கி. வாரி - கடல், தரங்கம் - அலை. மெத்தி - மிகுதியாகி. சுட்டி - குத்தீட்டி. தரம் - மேன்மை; சிறப்பு. அமராவதி - இந்திரனது இராசதானி. கொற்றம் - வெற்றி, கொற்றவன் - வெற்றியை உடையவன்) 65