பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் சேர்த்து வைத்துக்கொள்ள முடியுமா? மூக்குக்கு நல்ல மணத்தைத் தருகின்றது மலர் என்று கொண்டு வந்து சேர்த்து வைத்துக்கொண்டால் எவ்வளவு நாளைக்கு வாடாமல் இருக்கும்? இந்திரியங்களின் நுகர்ச்சிக்கு உரிய பண்டங்களை வேண்டும்போது வேண்டிய அளவில் பெறுவதற்கு உரிய கருவியாக இருப்பது செல்வம். செல்வம் இருந்தால் எந்தக் காலத்திலும் இந்திரிய நுகர்ச்சிக்கு உரிய பொருளாக அதை மாற்றிக் கொள்ளலாம். எந்தச் சமயத் திலும் எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். அதனால் தான் செல்வத்தைச் சேர்ப்பதில் அத்தனை ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய அத்தனை பண்டங்களையும் பணத்தாலே பெற்றுவிடலாம். பழங்காலத்தில் பெண்மை நலம் போன்ற சிலவற்றைப் பணத்தால் பெற முடியாது. நினைத்த பெண்களை நினைத்தபொழுது பணத்தால் மணக்க முடியாது. ஆண்டவனிடத்தில் அடிமை செய்கிற மனசைப் பணத்தால் மாற்ற முடியாது. அந்தக் காலத்திலேயே செல்வத்திற்கு எத்தனையோ ஆற்றல் இருந்தது என்று சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பணத்திற்கு விற்றுவிடும் காலம் இது. 'நமக்கு என்று ஒரு கொள்கை இல்லாமல், ஒரு கட்டுப்பாடு இல்லாமல் பணத்தால் யாரும் எதையும் சாதித்துவிடலாம். பணம் இருந்தால் போதும்; இந்திரியங்களின் நுகர்ச்சிக்குத் தேவையான எல்லாப் பொருளையும் பெற்றுவிடலாம்' என்ற செருக்கேறியிருக்கிற காலம் இது. 'அருளிலார்க் கவ்வுலகம் இல்லை பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்று வள்ளுவர் சொல்கிறார். நிச்சயமாகச் செல்வந்தான் இவ் வுலகத்தை ஆளுகிறது. ஆகவே மலை மலையாகக் குவிக்க வேண்டுமென்ற வேட்கையினாலே பலர் பொருளை ஈட்டுகிறார்கள். அருளை அடைய இறைவனை வழிபட வேண்டுமானாலும், இறைவனுக்கு உற்சவங்கள் செய்வதானாலும் பணம் இல்லை என்றால் முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டு வருகிறது. இறைவனுக்கு அருச்சனை செய்ய வேண்டும்; நம் வீட்டுத் தோட்டத்திலே பூச்செடிகள் வைக்கவில்லை; கடைக்குச் சென்று காசு கொடுத்துப் பூ வாங்கி வரவேண்டி இருக்கிறது. இறை 67