பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 'அடேயப்பா உட்கார்ந்து சாப்பிட்டாலும் மூன்று தலைமுறை களுக்குச் சாப்பிடலாமே! அத்தனை சொத்து அல்லவா அவனிடம் இருந்தது? எப்படி அவன் இந்தக் கதிக்கு வந்தான்? மாட மாளிகையில் வாழ்ந்தவன் நடுச்சந்தியில் நிற்கிறானே என்று ஒருவனுடைய வாழ்க்கை ஆற்றில் வெள்ளம் வடிந்ததைப் பற்றிப் பேசுவதையும் கேட்கிறோம். கடலில் சேரும் ஆறு செல்வம் என்பது திடீரென்று வருகின்ற பெருக்கு. பெருக்கு வரும்போது செருக்கும் வருகின்றது. வாழ்க்கையாற்றில் அந்தப் பெருக்கு வருகிறது. அந்த ஆற்றுக்கு இன்பம் துன்பம் என்று இரண்டு கரைகள். ஆற்றிலே போகின்ற வெள்ளம் கரைகளை நோக்கிப் பாய்ந்தால் அவை உடைத்துக் கொள்ளும். கரைகளை அடுத்துள்ள கிராமங்கள் அழிந்துவிடும். ஆனால் நல்ல ஆறு, எத்தனை வெள்ளம் வந்தாலும் கரைகளைப் பார்க்காமல் தான் போய்ச் சேரவேண்டிய கடலையே பார்க்கும். வாழ்க்கையாகிய ஆற்றிலே செல்வமாகிய வெள்ளம் வரும்போது இன்பம், துன்ப மாகிய இரு கரைகளையும் பார்க்காமல், சென்று சேருகின்ற கடலைப் பார்த்து, லட்சியத்தைப் பார்த்துச் சென்றால் அந்த ஆறு நிச்சயமாகக் கடலைப் போய்ச் சேரும். அது நல்ல ஆறு ஆகும். வாழ்க்கையாறு கடவுள் என்ற கருணைக்கடலைப் போய்ச் சேரவேண்டும். கடலைப் போய்ச் சேருகின்ற ஆற்றிலே எத்தனை வெள்ளம் வந்தாலும் பயம் இல்லை. அலை மோதினாலும் பய மில்லை. கடலைப் போய்ச் சேரவேண்டுமென்ற நினைப்பு இல்லாத ஆறு வெள்ளம் வரும்போது கரைகளைத் தாக்கி உடைத்துக் கொண்டு பல விதமான நாசத்தை உண்டாக்குகிறது. வாழ்க்கை என்னும் பெரிய காட்டாற்றில் செல்வம் என்ற வெள்ளம் வரும் போது அது இன்பம் என்ற கரையையும், துன்பம் என்ற மற்றொரு கரையையும் மோதுகிறது. முன்னை வினைப்பயன் ஒரே நிலையில் இருக்கின்ற இரண்டு பேரைப் பாருங்கள். 'இன்பத்தை அடைவதற்குக் காரணமான செயல் ஒன்றும் அவன் 72