பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அருணை முனிவர் தம் நெஞ்சைப் பார்த்து உபதேசம் செய்கிறார். ஆயினும் நம் நெஞ்சங்களுக்குச் செய்த உபதேசம் அது. கருணைக்கடல் செல்வத்தைக் கண்டு மயங்கலாகாது. அது இன்று வரும்; நாளை மறையும். ஆற்றில் சுழித்தோடும் வெள்ளப் பெருக்கு வருவதுபோல வரும்; வெள்ளம் வடிவதுபோல வடிந்தும் விடும். இந்த ஆற்றுக்கு இன்பம், துன்பம் ஆகிய இரு கரைகள் உண்டு. இந்த இரண்டையும் கழித்துவிட்டு வேகமாக நேரே போகவேண்டும். கடலில் கலக்கும்போது ஆறு கரைகளினின்றும் இழிந்துபோய்க் கலக்கும். கரை இல்லையே என்று அப்போது நினைக்கக் கூடாது. இங்கே கரைகள் இருக்கின்றனவே என்றும் நினைக்கக் கூடாது. இந்தக் கரைகளுக்கு அடங்கி, இவற்றை மோதாமல் போனால் கரையற்ற கருணைக்கடலில் கலந்து விடலாம். வேகமாக எங்கும் நிற்காமல் நேராகப் போவதற்குத்தான் ஆறு என்று பெயர். தேங்கி இருந்தால் குட்டை. அதில் பாசி படரும். ஒடும் ஆற்றில் பாசி படியாது. அதைப்போல வாழ்க்கை யாகிய ஆறு செல்வப் பெருக்கால் குலையாமல் இன்ப துன்ப மாகிய கரைகளை மோதிக் கொண்டு தேங்காமல் அவற்றை எல்லாம் கழித்துவிட்டு நேராகச் சென்றால் அதில் பாசம் தங்காது. அந்த ஆறு எங்கே ஒடிப்போய்ச் சேரவேண்டுமென்பதைப் பின்னே பாடுகிறார். காவிரிச் செங்கோடன் அவரைப் பார்த்து, "செல்வத்தைக் கண்டு மயங்காமல், இன்ப துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் என்ன செய்யவேண்டும்? எங்கே போகவேண்டும்? கொஞ்சம் சொல்லுங்கள் சுவாமி என நாம் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொல்கிறார். கரிக் கோட்டுமுத்தைக் . கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலை. - . 76