பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு ஆறுகள் அப்பர் சுவாமிகள். அவர் வெட்டுகின்ற இடங்களில் பொன்னும் மணியும் கிடக்கும்படி செய்தான் இறைவன். இது மணி யாயிற்றே; இது பொன் ஆயிற்றே" என்று அப்பர் சுவாமிகள் எண்ணி அவற்றை வாரித் திரட்டிக் கொள்ளவில்லை. அடி யார்கள் நடக்கும் இடத்தில் வெறும் கல் குத்துவது போலத்தானே மாணிக்கக் கல்லும் பொன் கட்டியும் குத்தும் என்று எண்ணிக் கல்லோடும் மண்ணோடும் சேர்த்து அவற்றையும் ஒன்றாகவே குவித்து அப்பால் கொண்டு போய்க் கொட்டினார். இப்படித்தான் அடியார்கள் இன்பத்தையும் துன்பத்தையும், செல்வத்தையும் கழித்துக்கொண்டே இருப்பார்கள். காவிரி கடலாகிய தன் தலைவனோடு கலப்பதற்காக நில்லாமல் வெகு வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறது. கரிக்கோட்டு முத்தை நின்று எடுக்காமல், அவற்றை அப்படியே கொழித்துக்கொண்டு ஒடுகிறது. மலரையும், தந்தத்தையும், முத்தையும், மணியையும் லட்சியம் செய்யாமல் ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையில் இருக்கிறான் நம்முடைய தலைவன். தான் இருக்கும் இடம் எல்லோருக்கும் தெரிவதற்காகத் திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கிறான். வேல் செங்கோட்டில் இருப்பவன் யார்? செங்கோட்டு வேலன். எம்பெருமான் திருவுருவத்தில் வேலும் இருப்பதனால் செங் கோட்டு வேலன் என்றே சிறப்பாகச் சொல்வார்கள். "நாகாசல வேலன்' என்றும், 'தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவனே' என்றும் அருணகிரியார் கூறுவர். செங்கோட்டைப் பார்த்தால் போதாது. செங்கோடனிடத்தில் புகுகின்ற துறை ஒன்று இருக்கிறது. காவிரி ஆறு கடலோடு சங்கமம் ஆகும் துறை ஒன்று இருப்பது போலச் செங்கோடன் என்ற கருணைக்கடலோடு நம் உள்ளம் சங்கமம் ஆவதற்கு இங்கேயும் ஒரு துறை இருக்கிறது. அதுவே நம்முடைய அவித்தை யாகிய இருளைப் போக்கி ஞான ஒளியைக் கொடுக்கக் கூடிய 79