பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 வேல். அந்த வேலை அவன் தன் திருக்கரத்தில் வைத்திருக கிறான். செங்கோடனைத் தியானம் பண்ண அந்த வேல் உதவியாக இருக்கும். வேலின் பெருமை என்ன? குன்றம் எட்டும் கிழித்தோடு வேல். சூரபன்மன் அரசாட்சிக் காலத்தில் அவனுக்கு எல்லைச் கற்களாக நின்ற அஷ்ட குலாசலங்களையும் அந்த வேல் கிழித் தோடிற்று; பொடி பொடியாக்கியது. வாழ்க்கையாகிய ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் நாம் காவிரி ஆற்றை நினைக்க வேண்டும். அது ஒரு கணம்கூட எங்கேயும் நிற்பது இல்லை. எந்தப் பள்ளத்திலும் தேங்கிக் கிடப்பது இல்லை. யானைத் தந்தத்தின் முத்துக் கிடைத்தாலும், பொன் கிடைத்தாலும் அவற்றை அது லட்சியம் செய்வதே இல்லை. அவற்றைக் கொழித்துக்கொண்டு வேகமாகக் கடலோடு சேரப் போய்க் கொண்டே இருக்கிறது. அதைப் பார்க்கும்போதாவது நாம் சென்று சேரவேண்டிய கருணைக்கடலாகிய செங்கோடன் நினைவு வருகிறதா? அவனோடு சங்கமம் ஆவதற்கு உரிய துறையாகிய வேல் நினைவுக்கு வருகிறதா? 'வாழ்க்கையாகிய சுழித்தோடும் ஆற்றில் பெருக்குப் போல வருகின்ற செல்வத்தை மதித்து மயங்கி நிற்கக் கூடாது. அவ்வாற்றின் கரைகள் போலுள்ள இன்ப துன்பத்தைக் கண்டு அஞ்சி நிற்கலாகாது. நடுவிலே தேங்கினால் பாசியாகிய பாசம் பிடிக்கும். வேகமாக ஒடுகின்ற ஆற்றில் பாசி படராது. பெருக் காகிய செல்வத்தையும், இன்ப துன்பமாகிய கரைகளையும் கழித்துவிட்டுக் கொண்டு நேராகச் செங்கோடனாகிய கடலோடு கலக்க அவன் திருக்கை வேலாகிய துறையைச் சென்று அடை வது எக்காலம்? செங்கோடனை நினையாமல், அவன் திருக்கை வேலை நினையாமல், செல்வத்தில் மயங்கி, இன்ப துன்பக் கரைகளை மோதிக்கொண்டு வாழ்க்கையில் பாசம் படரத் தேங்கிக் கிடக்கிறாயே! நமக்கு முத்தி எப்படிக் கிட்டும் மனமே!" என்று அருணகிரியார் இப்பாட்டில் பாடுகிறார். சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா - னதுசெல்வம், துன்பம்இன்பம் கழித்தோடு கின்றது.எக் காலம்?நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் 80