பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேல் மறவேன் என்று பாடுகிறார். 'ஏதோ பைத்தியம்" என்று அவரைப் பார்த்து எல்லாரும் கூறினார்கள். அவரோ, "உலகத்திலுள்ள பைத்தியம் எல்லாம் நம்மைப் பார்த்துக் கை தட்டி ஆரவாரிக்கின்றன; நாம் அவர்களைப் பார்த்து கைதட்டி ஆரவாரிக்கிறோம்' என்றார். அவரைப் பார்த்து யார் யார் கைதட்டி நகைத்தார்களோ அவர்களே அவரைப் பின்பு கையெடுத்துக் கும்பிட்டார்கள். இப்படியே, உள்ளத்தில் கோபமோ துக்கமோ மிகுந்து, குறிப்பிட்ட ஓர் எல்லையைக் கடக்கும்போது மற்றவைகள் எல்லாம் கீழே தாழும். இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒருவனை மற்றவன் கத்தியால் குத்தப் போகிறான். அவ்வழியில் செல்லும் யாரோ ஒருவன் அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க இடையே புகுந்தால் அவனைக் குத்தி விடுகிறான். அவனா எதிரி? இவன் கோபம் தடுத்தவனைப் போய்ச் சாரக் காரணம் என்ன? கோபம் என்ற உணர்ச்சி மீதுர்ந்து நிற்கும்போது கடமை, தர்மம், ஞாபகம், ஞானம் ஆகிய எல்லாமே அழிந்து விடுகின்றன. அதுபோலவே காமம் என்னும் உணர்ச்சி மிகும் போது எல்லாம் கீழே போய்விடுகின்றன. அருணகிரியார், "நான் காமத்தினால் கலவி என்னும் கள்ளை உண்ணுகிறேன்' என்று சொன்னார். ஆனால் அப்படி உண் டாலும் அவர் முற்றும் மயங்கவில்லை. அவருடைய மயக்கத்தில் ஒரு விஷயத்தில் மாத்திரம் நினைவு போகவில்லையாம். நிதானம் தவறாமை ங்கிலேயர் அரசாட்சி செய்த காலத்தில் கள்ளின் தீமை பற்றிச் சொல்ல ஒரு சபை இருந்தது. அதில் இருந்தவர்கள் 'குடிக்காதே’ என்று பிரசாரம் செய்வது இல்லை. "மிதமாய்க் குடி' என்று உபதேசம் செய்தார்கள். அந்தச் சபைக்கு மிதக்குடிப் பிரசார சங்கம் (Temperance League) என்று பெயர். மிதமாகக் குடிக்க வேண்டுமென்பதற்கு என்ன கணக்குச் சொல்வது? இரண்டு கிண்ணமா, ஐந்து கிண்ணமா? ஒரு புட்டியா, இரண்டு புட்டியா? 'உன்னை மறக்காத நிலை வரைக்கும் சாப்பிடு. அதாவது, காபி சாப்பிடுகிறதுபோல உற்சாகம் வருவதற்குச் சாப்பிடு. புத்தி பேதலிக்கும்படி சாப்பிடாதே" என்று அந்தச் சங்கத்தார் சொன்னார்கள். ஆனால் சாப்பிடுகிறவன் அப்படி ஒரு $35