பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் மறவேன் இதற்குப் பல காலமாகப் பழக்கம் செய்திருக்க வேண்டும். இதைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கலாம். எப்போதும் நினைத்தல் மனிதன் எதில் பற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்தப் பற்றுக்கு மூல காரணமாக இருப்பது அவனுடைய பழக்க வழக்கங்கள். ஏதேனும் ஒரு பொருளிடத்தில் அதிகப் பற்று இருக்குமானால் அதைப் பற்றிப் பேசியும், அதைப்பற்றி நினைந் தும், அது சம்பந்தமாகவே காரியங்களைச் செய்தும் வருவான். அருணகிரிநாதப் பெருமான் எப்பொழுதும் இறைவனைப் பற்றிப் பேசியும், இறைவனையே தியானம் செய்தும், இறைவனோடு சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்தும் வாழ்ந்தவர். இந்த நிலையால் எப்பொழுதுமே இறைவனை மறக்காமல் இருக்கும் உணர்ச்சி அவருக்குக் கிடைத்தது. மறப்பதும் நினைப்பதும் மனத்தினுடைய செயல்கள். இறை வனை வழிபடுவதும் துதிப்பதும் மற்றக் கரணங்களின் செயல் கள். எப்போதும் அவனை நினைத்துக் கொண்டிருப் பதற்குப் பழக்கம் வேண்டும். பழக்கத்தால் அது கை கூடும். அருணகிரியார், "நான் சிற்றின்பத்தை நுகரும்போதும் வேலை மறக்கமாட்டேன்' என்று சொன்னாலும் நம் போன்றவர்களுக்கு ஒர் அரிய உண்மையை அதன் வாயிலாகச் சொல்லித் தருகிறார். எம்பெருமானுடைய திருவடிகளை, அவனுடைய வேலாயுதத்தை, நெஞ்சிலே நினைக்க வேண்டும். உலகத்தில் வாழும்போது பல பல இன்னல்கள் அதைக் குலைக்க வரும். ஆனாலும் திருப்பித் திருப்பி அவனுடைய திருவுருவ நினைவு நமக்கு வரவேண்டும். அப்படி வந்து பழகினால் எந்தச் சமயத்திலும் அவனுடைய நினைப்பு நமக்கு உண்டாகும். எந்த விதமான செயல்களைச் செய்தாலும், மனம் இயங்கும் வரைக்கும் அந்த மனத்தில் இறை வனுடைய வேலை நினைக்கலாம். தொழுது எழுதல் "தொழுதெழுவார் வினைவளம் நீறெழ' க.சொ. 11-7 87