பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பொருத்தம். காமியாகப் போன அவன் அதற்கு முன்பு எச்சி கையினால் காக்கையை ஒட்டாமல் இருந்திருப்பான். ஆனா பெண்ணாசை உண்டான பிறகு தான் பற்றிக் கொண்டிருந் பொருளில் அபிமானம் போய்த் தாராளமாகச் செலவழிச் ஆரம்பிப்பான். சூதில் நாட்டமுடையவனும் பொருளில் பற்று கொள்ளாமல் அதனைச் செலவழிப்பான். பொருளில் பற்று கொள்ளாமல் செலவழிப்பதனால் அவர்களை நல்லவர்கள் என் சொல்லலாமா? ஒரு தீமை போய் மற்றொரு தீமை அவர்க நெஞ்சில் இடம் கொள்கிறது. அவர்களுடைய நெஞ்சம் காமத் னால் உருகுகிறது; சூதினால் உருகுகிறது. எப்படியோ அந் உருக்கம் ஏற்பட்டதனால் அங்கே இறுகிப் பற்றிக் கொண்டிருந் பொருள் விடுதலை பெறுகிறது. இவ்வாறு உலக அநுபவத்தில், இத்தகைய கசிவு ஏற்பட்டாே மனத்திலே பற்றிவிட்ட பொருளைப் பிறருக்கு உதவும் இயல் உண்டாகிறதென்பதை அறிகிறோம். அந்தக் கசிவு நெடுநா இருப்பதாக, நல்ல பயனைத் தருவதாக, உண்மைத் தன்மை உடையதாக இருந்தால் பொருள் நல்ல வழியில், ஈகையில் செலவாகும். கசிவு உண்டாக வழி அந்தக் கசிவு உண்டாவதற்கான வழியை அருணகிரியா சொல்லித் தருகிறார். வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக் மாய்ப்பவரே. முருகப்பெருமானைப் பாடி நெஞ்சம் கசிய வேண்டுமென்று சொல்கிறார். இங்கே முருகப் பெருமானை, வேடிச்சி கொங்கை விரும்பும் குமரன் என்கிறார். இறைவன் பெரிய செல்வன். 3G