பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பலமுறை வருவதற்குக் கூலி கொடுப்பது BL 76 ஆகும் ஒருவனுடைய வறுமையைக் குறிப்பினால் அறிந்து, 'இறைவன் திருவருள் நம்மிடத்தில் பொருளை வைத்திருக்கிறது. வேண்டிய வர்களுக்கு வழங்குவதற்காகவே அது இருக்கிறது' என்று உணர்ந்து கொடுக்க முன்வருகிறவன் சிறந்த வள்ளல். . இறைவன் எல்லோரினும் சிறந்த வள்ளலாக இருக்கிறான். அவனிடத்தில் உள்ள அருட்செல்வம் பிறருக்குப் பயன்படுவதற் காகவே அமைந்தது. அருட்செல்வம் பெறாதவர்கள் அதனை யாசிக்காமல் இருக்கும்போது தானே வந்து தடுத்தாட்கொண்டு அதனை அவர்களுக்கு வழங்குகிறவன் இறைவன். இந்த அற்புத மான பெரும் கருணையை முருகப் பெருமான் தன்னுடைய செயலினால் காட்டினான். வள்ளியின் நிலை x வேடர் குலத்தில் பிறக்காதவளாக இருந்தும் அங்கே வளர்ந்தமையினால் அதுவே தனக்கு இயல்பான இடம் என்று கருதி, தன் நிலையை மறந்து வாழ்நாள் வேடிச்சியாகிய வள்ளி. சத்துவ குணம் நிறைந்த மானுக்கும், ஞானம் நிரம்பிய முனிவருக் கும் குழந்தையாகப் பிறந்த பெருமாட்டி இறைவனோடு வாழ்வது தான் இயற்கை. அப்படிச் செய்யாமல் மாயைப் பெருங்காட்டில், இரக்கமற்ற மனித மரங்கள் வாழ்கிற இடத்தில், ஐந்து புலன் களாகிய வேடர்களுக்கு நடுவில், ஆணவம் என்னும் யானைகள் உலாவுகிற சூழ்நிலையில், சிற்றின்பம் ஆகிய தினையைப் பாதுகாத்துக் கொண்டு, இதுவே தன் வாழ்வின் பணி என்று எண்ணி வாழ்ந்தாள். ஆனால் வேட்டுவர் குலத்தோடு வாழ்ந்த பழக்கத்தால் குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமானிடத் தில் ஒருவகை அன்பு இருந்தது. அது மிகச் சிறிய வித்தாக இருந்தது. அது வளர்ச்சிபெற வேண்டுமென்று அவள் நினைக்க வில்லை. பரம கருணாநிதியாகிய முருகப் பெருமான் அதனை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டுமென்று எண்ணினான். ஒடியாடும் குழந்தையைத் தாய் சில சமயங்களில் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்வாள். இல்லாவிட்டால் தான் முன்போக அது பின் தொடரச் செய்வாள். ஆனால் முடமான $2