பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கசிவு உள்ளபோது கொடுக்க வேண்டும் என்ற உண்மையைத் தான் அப்படிக் கொடாதவர் பெறுகின்ற துன்பத்தைச் சொல்லும் வாயிலாக நமக்கு அறிவுறுத்துகிறார். - ஈயாதவர் அடையும் துன்பம் தன்னுடைய அருளை வலிந்து சென்று வள்ளியெம் பெருமாட்டிக்கு ஈந்த முருகப்பெருமானை எண்ணி, அவன் புகழைப் பாடி, நெஞ்சம் கசியவேண்டும். கசிந்த உள்ளத்தோடு பொருளிலே பற்றுக் கொள்ளாமல், பொருள் இருக்கும்போது பிறருக்கு ஈயவேண்டும். அப்படி ஈயாதவர்கள் இன்ன இன்ன துன்பத்தை அடைவார்கள் என்று சொல்கிறார். அவர் சொல்வது உலக இயல்போடு ஒத்ததாக இருக்கிறது. பணத்தினிடத்தில் இறுக்கமான பற்று உள்ளவர்கள் அந்தப் பணம் முழுமையும் அநுபவிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பழங்காலத்தில் பணத்தைப் பாதுகாப்பதற்குப் பாங்குகள் இல்லை. பிறரிடம் கொடுத்து வைப்பதற்கோ நம்பிக்கை இராது. அதனால் பணத்தைப் பூமியில் புதைத்து வைப்பார்கள். பிறருடைய கண்ணுக்குத் தெரியாமல் தாம் வேண்டிய போது எடுத்துக் கொள்ள வேண்டு மென்று மண்ணிலே புதைப்பது பழைய கால வழக்கம். பல இடங்களில் புதையல் கிடைத்தது என்று சொல்கிறார்கள். புதையல் யாருக்குக் கிடைக்கிறதோ அவன் அதிருஷ்டசாலி என்றும் நினைக்கிறார்கள். உண்மையில் ஒருவனுக்குப் புதையல் கிடைத் தால் கிடைத்தவனுடைய அதிருஷ்டத்தை நினைப்பதைக் காட்டி லும் அதைப் புதைத்தவனுடைய துரதிருஷ்டத்தை நினைக்க வேண்டும். தன்னிடம் பொருள் உள்ள போதே கொடுக்காமல், பிறருக்குத் தெரியாமல் புதைத்து வைத்த மனிதன் அதைத் தான் பயன்படுத்திக் கெள்ளாமல் போய்விடுகிறான்; அதனால் இப்போது வேறு ஒருவனுக்கு அது கிடைக்கிறது. புதைத்து வைக்கிறவர்கள் திருட்டில் கொடுத்து விடுகிறார்கள் என்று அருணகிரியார் சொல்கிறார். பிறன் ஒருவன் ஈட்டிய பொருளை அவன் அறியால் கொள்வது திருட்டு. தான் சேகரிக் காத பொருளைப் பயன்படுத்துவதும் ஒரு வகைத் திருட்டு. தன் தேவைக்கு மிகுதியான பொருளைப் பயன்படுத்துவது மற்றொரு 96