பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அநுபவத்தில், பணம் போய்விட்டதே என்ற கவலையினால் தம் உயிரையே விட்டவர் சிலரை அறிந்திருக்கிறேன். இதுதான் வாழ்வின் பயன்போலும்! ஈயாரும் ஈக்களும் 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பது கொன்றை வேந்தன். தம்மிடத்தில் பொருள் இருக்கும் போது அதை வறிய வர்களுக்கு ஈயாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தால், அவர்கள் தேடிய அந்தப் பொருளைத் தீயவர்கள் வலிந்து கைப்பற்றிக் கொள்வார்கள் என்பது இதன் பொருள். மனசோடு பிறருக்கு ஈந்தால் ஈபவனுக்கும் இன்பம்; பெறுபவனுக்கும் இன்பம். அப்படி இன்றி ஈயாமல் புதைத்து வைத்தால் அப்படி வைத்த வர்களுக்கும் பழி, பிறர் பொருளைப் பற்றிக் கொள்பவர்களுக்கும் பழி. ஈயாதவர்களால் இருமருங்கும் பழி உண்டாகிறது. இந்த அடிக்கு மற்றொரு பொருளும் உண்டு. ஈயார் என்பது பரிகாசமாக ஈக்களைக் குறிக்கும் சொல். ஈக்கள் பல இடங் களுக்குப் பறந்து சென்று மலர்களை நாடி அவற்றிலுள்ள தேனைத் தேடிக் கொணர்ந்து தேன் அடை வைக்கின்றன. அவற்றின் தேட்டுத்தான் தேன். தேட்டு - தேடிவைத்தது. மலைப் பக்கங்களில் பாறைகளில் பெரிய பெரிய தேனடைகள் சாரி சாரியாக இருக்கும். அவற்றை மக்கள் எடுத்துத் தேனைப் பிழிந்து தொகுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எவ்வாறு தேனை எடுக்கிறார்கள், தெரியுமா? தீப்பந்தங்களைக் கொண்டு சென்று ஈக்களைக் கொளுத்துவார்கள், தேனடைக்குக் கீழே பெருந்தீயை மூட்டி எரிய விடுவார்கள். அதனால் ஈக்கள் தேனடைய விட்டு ஒடிவிடும்; பல இறந்து போகும். பிறகு தேனடையை எடுத்துக் கொள்வார்கள். ஈக்கள் தேடித் தொகுத்த தேனாகிய தேட்டைத் தீயை உடையவர்களாகிய மக்கள் கொள்கிறார்கள். 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். என்பதற்கு இப்படியும் ஒரு பொருள் கொள்ளலாம். - இந்த இரண்டு வகையான கருத்தையும் ஒன்றுக்கு ஒன்று உவமையாக வைத்து நாலடியாரில் ஒரு பாட்டுச் சொல்கிறது. “தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு சிலர் நல்ல உடையை $8