பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் உண்டாகிறதே; எத்தனையோ தீங்குகளைப் புரிந்து வருகிற அவனுக்கு இன்பம் கிடைக்கிறதே என்று அவனுக்கு ஆலோசனை தோன்றும். அதனால் இப்போது உண்டாகிற விளைவுக்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டுமென்ற தெளிவு உண்டாகும். முற்பிறவியில் நாம் தக்கபடி நடக்காமல் இரப்பவர்களுக்குக் கொடுத்துப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளாமையினால் இந்த நிலை வந்தது என்ற உணர்ச்சி உண்டாகும். 'இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்;பலர் நோலாதவர்' என்பது திருக்குறள். உலகத்தில் பலர் வறுமை வாய்ப்பட்டிருக் கிறார்கள். சிலர் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், முற்பிறவியில் இந்த உடம்புக்கு வேண்டிய சுகங்களை மட்டும் எண்ணி வாழாமல் நல்ல காரியங்களைச் செய்து விரதம் மேற்கொண்டவர்கள் சிலரே, அப்படி இல்லாதவர்களே பலர். ஏறுபவனும் சுமப்பவனும் மற்றோர் உதாரணம் காட்டுகிறார் திருவள்ளுவர். ஒரு பல்லக்கு; அதன் மேல் ஒருவன் ஏறிச் செல்கிறான்; அதனை நான்கு பேர்கள் சுமக்கிறார்கள். இன்பத்தை அநுபவிக்கிறவன் ஒருவன்; துன்பத்தை அநுபவிக்கிறவர்கள் நான்கு பேர். பிறரால் சுமக்கப்பட்டுப் பணத்தை வைத்து வாழ்பவன் ஒருவன்; பிறரைச் சுமந்து சிறிதளவு கூலியைப் பெறுகிறவர்கள் நான்கு பேர். இதே அளவுதான் உலகத்தில் சுகம் துக்கம் என்பதற்கும் அமைந்திருக் கிறது. சுகப்படுகிறவர்கள் ஒரு பங்கானால் துன்பப்படுகிறவர்கள் நான்கு பங்கு. 'அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோ டுர்ந்தான் இடை” ான்று திருவள்ளுவர் சொல்கிறார். அறம் செய்கிறவர்கள் அடையும் பயன் இன்னது என்று ஆராய்ச்சி செய்யவேண்டாம். கண்முன் னால் பார்க்கிற உதாரணத்தினால் தெரிந்து கொள்ளலாம். ஒருவன் சிவிகையில் ஏற நான்கு பேர் சுமக்கிறார்கள். இரண்டு வகையினருக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை; பிறப்பிலும் 1.சொ. V-8 iC3