பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் தளர்ந்தவர்களுக்குக் கொடுத்தல் யாருக்குக் கொடுப்பது? இப்போது பணக்காரர்கள் பிறருக்குக் கொடுப்பது உண்டு. தம்முடைய பிள்ளைக்குக் கொடுக்கிறார்கள்; மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறார்கள்; உறவினர்களுக்குக் கொடுக் கிறார்கள். ஏதாவது திருமணம் அவர்கள் வீட்டில் நடந்தால் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள்; தம் பொருளை அழித்துப் பெரிய விருந்து செய்கிறார்கள். வேண்டியவர்களுக்குப் பணம் கடன் கொடுக்கிறார்கள்; ஆடையாபரணங்களைச் சில சமயங் களில் இரவலாகக் கொடுக்கிறார்கள். இப்படிக் கொடுப்பதும் கொடைதானே என்றால், அது கொடையாகாது. தம்மோடு சார்ந்த வர்கள் என்ற அபிமானத்தாலும், தமக்குப் பெயர் வரவேண்டுெ மன்ற ஆசையினாலும் செய்வது அது. உண்மையான ஈகை, யாருக்குக் குறையுண்டோ அவர்களுக்குக் கொடுப்பதுதான். அருணகிரியார் இதை நினைந்தே, தளர்ந்தவர்க்கு ஒன்று ஈகைக்கு எனை விதித்தாய் இலையே! என்று சொல்கிறார். 'வறியார்க்கொன் lவதே ஈகை;மற் றெல்லாம் குறிஎதிர்ப்பை நீர துடைத்து” என்பது திருக்குறள். ஒரு பொருளால் குறை உடைய ஏழைகளுக்கு அவர்களுக்கு வேண்டிய பொருளைத் தம்பால் உள்ளவர்கள் கொடுப்பதுதான் ஈகையாகும். அப்படி இன்றி மற்றவர்களுக்குக் கொடுத்தால் அப்படிக் கொடுப்பதற்குக் கைம்மாறாக ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். தம் முடைய மாப்பிள்ளைக்குப் பணம் கொடுப்பதற்கு, அவன் தம் பெண்ணை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நினைவு காரணம். தம்முடைய அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு விருந்து வைப்பதற்கு, அவர் திரும்பத் தம்மைக் கூப்பிட்டு விருந்து வைப்பார் என்பதே காரணம். மதுரையில் இருந்து வந்த நண்பர் ஒருவருக்குப் பாயசம், பொங்கல் முதலிய வற்றோடு உணவு அளித்தால் அதற்குக் காரணம் அவர்கள்பாலுள்ள அன்பு மாத்திரம் அன்று; நாம் அவர் ஊருக்குப் போனால் நமக்கும் அப்படியே விருந்து செய்வார் என்று எதிர்பார்த்தே iO5