பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்படிச் செய்கிறார்கள். ஒரு பொருளைக் கொடுத்து மீட்டும் அளந்து வாங்கிக் கொள்வதைக் குறியெதிர்ப்பை என்று சொல் வார்கள். ஏழைகளுக்கு அளிக்காத கொடை, பின்பு அது திரும்பி வரும் என்ற எண்ணத்தால் செய்வதே என்பது திருவள்ளுவர் கருத்து. ஆகையால் யாருக்கு உண்மையாகப் பொருள் தேவையோ, யாருக்குக் குறை இருக்கிறதோ, வாழ்க்கைக்கு வேண்டிய அவசிய மான பொருள்களைப் பெறாதவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்குக் கொடுப்பதுதான் கொடை, அறம். உண்மையான வள்ளல்கள் வறியவர்கள் தம்மை நோக்கி வராவிட்டாலும் தாம் அவர்களைத் தேடிச் சென்று கொடுப்பார்கள். தாம் பொருளை வைத்திருப்பதற்குப் பயன் இரவலர்களுக்குக் கொடுப்பதே என்று அறம் செய்வோர் எண்ணுவார்கள். பழங்காலத்தில் அரசர்கள், ஒரு நாள் தம்மை நாடி யாரேனும் இரவலர் வராவிட்டால் அதற் காக வருந்தினார்கள். ஒருவன் ஓரிடத்தில் சபதம் செய்கிறான். 'நான் இப்படிச் செய்வேனானால் பலநாட்கள் என்னை நாடி இரவலர்கள் வராமல் இருப்பார்களாக' என்கிறான். "இரவலர் வாரா வைகல் பலஆ குகயான் செலவுறு தகவே' என்பது அவன் கூற்று. ஒவ்வொரு நாளும் நன்றாகச் கழிந்தது என்ற நிறைவு வரவேண்டுமானால் அன்று நல்ல அறச் செயல் செய்தோம் என்ற நினைவு இருக்க வேண்டும். பொருளை ஈட்டு வது பெரிதன்று; அதனால் நாம் நன்மை அடைவதும் பெரிதன்று. அதனைப் பிறருக்கும் கொடுத்து அதனால் வருகிற இன்பத்தைப் பெறுவதே அதனால் உண்டாகும் சிறந்த பயன். அந்த இன்பம் மிகுதியாக வேண்டுமானால் செல்வரிடமிருந்து பொருளைப் பெறுகிறவர்கள் உண்மையான ஏழைகளாக இருக்கவேண்டும். வறுமையினால் தளர்ந்தவர்களுக்கு, உடல் வலிமை இல்லாமல் தளர்ந்தவர்களுக்கு, அன்னமும் ஆடையும் இல்லாமல் தளர்ந்தவர் களுக்கு, இப்படியே எந்த எந்தப் பொருள் இல்லாமல் தளர்ந் திருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த அந்தப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்று அருணகிரியார் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். 1. இரப்பவர்கள் என்னை நோக்கி வாராத நாட்கள் பலவாகட்டும், நான் இனிப் பிறக்கும் பிறப்பில். 106