பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ராமபிரான் சினம் அவருக்குக் கோபம் வந்துவிட்டது. rத்திரிய குலத்தில் பிறந்தவர் அவர் தளர்ந்தவர்களுக்கு உதவி செய்யாமல் ஒளிந்து கொள்பவர்களுக்குக் கடும் நரகம் விதிக்கும் பிரான். ஆகவே தம்பியைச் சிலை கொண்டுவரச் செய்தார். அதை வளைத்து, "பார்இ யங்கிரும் புனலெலாம் முடிவின்றிப் பருகும் சூரியன்கதிரனையன சுடுசரம் துரந்தான்.” ராமர் அம்பை விட்டார்; கடல் வற்றிவிட்டது. வருஎைனது உடம்பு அப்படியே தீய்ந்து போய்விட்டது. வரிசை வரிசையாக ராமர் விட்ட பாணங்களினால் கடலில் வாழும் உயிர்கள், "வெந்தன தீந்தன கரிந்தன பொரிந்தன." எங்கே பார்த்தாலும் ராமர் விட்ட அம்புகள் குத்திக் கொண்டு நின்றன. பூமியாகிய மடந்தை முன்பு கடலாகிற நீல ஆடையைச் சுற்றிக் கொண்டிருந்தாள். இப்போது கடல்நீர் வற்றிவிட்டது. ராமபிரான் விட்ட கொடுங்கனைகள் அவள் உடம்பு முழுவதும் குத்திக் கொண்டு குருதி வழிந்தது. நில மடந்தை நீல ஆடையைக் களைந்துவிட்டுச் செந்நிற ஆடையை அணிந்தாற்போல இருந்த தாம் அந்தத் தோற்றம், வருணன் இதனால் துன்பத்தை அடைந்தான். பின்பு அவன் சும்மா இருக்க முடியுமா? அழுத கண்ணிரோடு, "நான் உனக்கு அபயம்' என்று கதறிக்கொண்டு வந்து வீழ்ந்தான். முன்னாலே தளர்ந்து வந்து உதவி கேட்ட பெருமானுக்குக் கரவாமல் அவன் உதவியிருந்தால் இந்தத் தண்டனை கிடைத்திருக்குமா? இரப்ப வர்க்கு ஈயாமல் இருந்தான். அதனால் தண்டனை கிடைத்தது. இரப்பவர்களுக்கு ஈயாமல் கரப்பவர்களுக்கு இப்படித்தான் தண்டனை கிடைக்கும் என்பதை ராமபிரான் காட்டினார். இந்த வரலாற்றை இப்போது அருணகிரியார் இடத்துக்குப் பொருத்தமாக நினைப்பூட்டுகிறார். 'இலங்காபுரிக்குப் போகைக்கு நீ வழி காட்டு' என்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலை வளைத்தோன் மருகா! மயில்வாகனனே. 112