பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசையில் இது பதினோரா வது புத்தகம். இதில் ஐம்பத்தைந்தாவது பாடல் முதல் ஐம்பத் தொன்பதாவது பாடல் வரையில் உள்ள ஐந்து பாடல் களுக்குரிய விளக்கம் இருக்கிறது. - - ஓங்கார ஒளி என்னும் முதற் சொற்பொழிவில் அருணகிரி நாதப் பெருமான், "இவ்வாறு செய்யாமல் மக்கள் வீணாக வாழ்கிறார்களே! யமதூதர்கள் வந்தால் என்ன செய்வார்கள்' என்று இரங்கும் பாட்டுக்குரிய விளக்கம் இருக்கிறது. இவை செய்ய வில்லையே என்று இரங்கும் வாயிலாக, இவை செய்தால் யம பயத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்பதைப் புலப்படுத்துகிறார். ஓங்காரம் ஒரு மந்திரம்; அது ஒலிவடிவானது. அதைப்பற்றிப் பல பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பாட்டில் அருண கிரிநாதர் ஓங்காரத்துக்கு ஒளியும் உண்டு என்று சொல்லுகிறார். அநுபூதிமானாகிய அவர் கூறுவது கற்பனை அன்று. ஓங்காரம் அனுபவ நிலையில் ஒலியாகவும் ஒளியாகவும் இருந்து பொறிகள் பராமுகப் படாமல் ஒருங்கி நிற்க உதவி செய்யும் என்ற இரகசியத்தை இந்தப் பாடல் தெரிவிக்கின்றது. - இருவகைக் கவிகள் என்னும் சொற்பொழிவில், 'கிழியும் படி” என்ற திருப்பாடலின் விளக்கம் இருக்கிறது. இதிலும் யம பயத்தைப் போக்க ஒரு வழியை அருணகிரியார் கூறுகிறார். இறைவனுடைய புகழாகிய கவிகளைக் கேட்டு உருக வேண்டும் என்றும், இழியும் கவிகளைக் கேட்கலாகாதென்றும் உபதேசம் செய்கிறார். காதுள்ள போதே நல்ல கவிக்ளைக் கேட்டு உருகாத வர்கள் யம வாதனைக்கு ஆளாவர் என்ற கருத்தையும் தெரி விக்கிறார். - - இருபிடி சோறு என்ற சொற்பொழிவு, 'பொருபிடியும் களிறும்" என்ற பாட்டின் விளக்கம். மனிதனுடைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற் வகையில் உபதேசம் புரிகிறவர் அருண கிரியார் என்பது இந்தப் பாடலினால் நன்றாகப் புலப்படுகிறது.