பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி இறைவன் திருவருள் நெறியில் புகுந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சோபானங்களில் சென்று, எம்பெருமான் திருவருளால் இன்ப நலம் துய்த்த பெருமக்கள் பலர் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயும் இறைவன் திருவருள் நெறியில் ஒன்றியிருந்து தியான சமாதி கைவரப் பெற்ற அநுபூதிமான்கள் பாடுகிற பாட்டின் சுவையே தனிச் சிறப்புடன் இருக்கும். இவர்களுள் தலைசிறந்து விளங்கும் அருணகிரியார் நல்ல பல்வகையான உபதேசங்கள் அடங்கிய பாடல்கள் பலவற்றை நமக்கு அருளியிருக்கிறார். அநுபவ வேட்கை ஆண்டவன் கோயிலுக்குப் போக வேண்டும்; அவன் திருவுருவத்தை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்; அவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும்; தியானம் பண்ண வேண்டும்: என்று அவர் அறிவுறுத்தியுள்ள பல வகையான பழக்கங்களை நாம் செய்து கொண்டு வந்தாலும், அவற்றோடு நாம் நின்றுவிடக் கூடாது. பொழுதைப் பிற செயல்களிலே கழிக்கும் மக்களைக் காட்டிலும் இறைவன் திருவருளைப் பெற வேண்டுமென்ற ஆசையோடு அவன் திருநாமத்தை ஒதி, பஜனை செய்து வாழ்வது சிறந்ததுதான். ஆனாலும் ஒருவேளை சாப்பிட்டாலும், பட்டினி கிடந்தவனைக் காட்டிலும் நாம் சிறந்திருக்கிறோம்’ என்று யாரும் திருப்தி அடைவதில்லை. இரண்டு வேளை சாப்பிட வேண்டும்; மறுநாளும் சாப்பிட வேண்டும். என்றைக்கும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்றுதான் விரும்புவான். இறைவன் அருள் நெறித் திருக்கூட்டத்தில் கலந்து அவன் திருநாமத்தைச் சொல்லி, திருப்புகழைப் பாடி, வாழ்கிற வாழ்வு நல்ல வாழ்வுதான். அதோடு நின்றுவிட்டால் ஒருவேளை சாப்பிட்டவன் கதிதான் கிடைக்கும். அப்படி இல்லாமல் அதற்கும் மேலே எம்பெருமான் அருளால் மனத்தில் அமைதி காணுகின்ற