பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நிலையைப் பெற வேண்டும். அந்த நிலையைப் பெறுவதற்கு வழி இன்னது என்று நூல் ஆராய்ச்சியினாலே தெரிந்து ೧ಹನ್ತಿ। சொல்வது ஒரு வகை. அதைவிடச் சிறந்தது சொந்த அநுபவத்தின் மூலம் வழி காட்டுவது. அருணகிரியார் சொல்லும் முறை அநுபூதிமானாகிய அருணகிரிநாதர், எதிர்மறை முகத்தால், 'இப்படி எல்லாம் மக்கள் செய்யாமல் இருக்கிறார்களே' என்று இரங்கும் வாயிலாக, இன்னது செய்ய வேண்டும் என்பதை நமக்கு ஒரு பாட்டின் மூலம் அறிவிக்கிறார். இந்தப் பாட்டு அவரைப் போன்ற நல்ல அநுபூதிமான் ஒருவரால்தான் சொல்ல முடியும். 'ஐயா, இந்தக் குழந்தை இன்ன மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறானே! எங்கே பார்த்தாலும் விஷ சுரம் பரவிக் கொண்டிருக் கிறதே! இன்ன மருந்தைச் சாப்பிடாவிட்டால் அந்த நோய் வந்தால் என்ன செய்வான்?' என்று ஒருவர் இரங்குகிறார். அவர் அப்படிச் சொல்வதிலிருந்தே இன்ன மருந்து சாப்பிடுகிறவர் களுக்கு விஷ சுரம் வராது என்பது நமக்குத் தெரியவில்லையா? இன்ன மருந்தை உட்கொள் என்பதற்கும் அதற்கும் அதிக வேறுபாடு இல்லை. - தங்தையின் இயல்பு எப்போதும் ஒரு குடும்பத்திலுள்ள தாய்க்கும் தகப்பனுக்கும் அன்பின் வெளிப்பாட்டிலே வேறுபாடு உண்டு. அவர்களுடைய குழந்தை பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறான். அதைப்பற்றித் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைவாள். 'என் குழந்தை பரீட்சையில் தேறி விட்டான்' என்று ஊரிலுள்ளவர்களிடம் எல்லாம் பெருமை யாகச் சொல்லி மகிழ்வாள். தந்தைக்கும் மகிழ்ச்சி இராதா? இருந்தாலும், "பெரிதாகத் தேறிவிட்டானாக்கும் அடுத்த தெரு முருகன் ராஜ்யத்திற்கே முதல்வனாகத் தேறியிருக்கிறான். இவன் நன்றாகப் படித்திருந்தால்தானே அப்படித் தேர்ச்சி பெற?" என்று வெளிப்படையாகப் பேசுவார். தம்முடைய பிள்ளை குறை சிறிதுமின்றி, நிரம்பி வரவேண்டுமென்ற எண்ணத்திலேயே அப்படிச் சொல்வார். தம் பையன் தேர்ச்சி பெற்றது பற்றி அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி இருக்கத்தான் இருக்கும். 122