பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி குழந்தையிடத்தில் அன்புடைய தகப்பனாரைப் போன்று, உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் தகப்பனார் நிலையில் இருப்பவர் அருணகிரியார். உலகில் நல்ல வழியில் போகிற வர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும் அவர்களைப் பார்த்து வெளிப்படையாக மகிழ்ச்சி அடையமாட்டார். அவர் அப்படி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளா விட்டாலும் அவர்கள் நல்ல நெறியிலேதான் நிற்பார்கள். யார் நல்ல நெறியில் போய்க் கொண்டிருக்கவில்லையோ அவர்களைப் பார்த்து இரங்கினால் அவர்கள் திருந்தக்கூடும் என்ற பேரன்பினாலே, இறைவன் திரு வருளை மறந்து, அவன் அருளைப் பெறுவற்குரிய சாதனங் களைச் செய்யாமல், இந்திரியங்களின் வசப்பட்டுத் துன்பத்தை அடைகிறார்களே!' என்று அத்தகையவர்களைக் குறித்துத் தம்முடைய இரக்கத்தைப் புலப்படுத்துகிறார். ஆங்கா ரமும்அடங் கார்ஒடுங் கார்பர மானந்தத்தே தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யார் என்கிற வரைக்கும் இவை செய்யவில்லையே என்று சுட்டிக் காட்டுகிறார். தன் தந்தையைப் பார்த்து, "நான் படிக்காவிட்டால் உங்களுக்கு என்ன?’ என்று முரட்டுப் பிள்ளை கேட்கிறான். 'எனக்கு என்னடா? நான்தான் நீ பின்னாலே படப்போகிற துன்பங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகி றேனா? இப்போது படிக்காவிட்டால், நாளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று அவர்களைக் காப்பாற்றத் திண்டாடு வாயே! அப்போது என்ன செய்வாய்?" என்று சொல்கிற தந்தையைப் போல, அருணகிரியார் தாம் சொல்லியவற்றைச் செய்யாமையினால் என்ன உண்டாகும் என்பதைக் கடைசியில் சொல்கிறார். என் செய்வார் யமதூதருக்கே? 'இப்போது வருகிற இடையூறுகளை எல்லாம் தம்முடைய அறிவினாலே, வாய் பலத்தினாலே, உடம்பின் ஆற்றலினாலே போக்கிக் கொள்ளலாம். இவற்றினாலே போக்கிக் கொள்ள 123